Last Updated : 26 Nov, 2024 01:47 PM

 

Published : 26 Nov 2024 01:47 PM
Last Updated : 26 Nov 2024 01:47 PM

சேதி தெரியுமா? தேர்தல் முடிவு முதல் ஐபிஎல் ஏலம் வரை

நவ.19: உக்ரைனுக்கு எதிரான போரில் அணு ஆயுதங்களைப் பயன்படுத்த ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின் ஒப்புதல் வழங்கினார்.

நவ.19: மகாராஷ்டிராவில் ஒரே கட்டமாக 288 சட்டமன்றத் தொகுதிகளுக்கு நடைபெற்ற தேர்தலில் 66.05% வாக்குகள் பதிவாயின.

நவ.19: ஜார்க்கண்டில் இரண்டாம் கட்டமாக 38 சட்டமன்ற தொகுதிகளில் நடைபெற்ற தேர்தலில் 68.95% வாக்குகள் பதிவாயின.

நவ.20: டேவிஸ் கோப்பை டென்னிஸ் தொடரோடு ஸ்பெயின் நட்சத்திர வீரர் ரபேல் நடால் டென்னிஸ் போட்டிகளிலிருந்து ஓய்வு பெற்றார். ஒட்டுமொத்தமாக 22 கிராண்ட்ஸ்லாம் பட்டங்களை வென்றவர் இவர்.

நவ.20: பீகாரில் நடைபெற்ற மகளிர் ஆசிய சாம்பியன்ஸ் கோப்பை ஹாக்கி தொடரின் இறுதிப் போட்டியில் சீனாவை வீழ்த்தி இந்திய அணி கோப்பை வென்றது. இதற்கு முன்னர் 2016, 2023இல் இக்கோப்பையை இந்தியா வென்றிருந்தது.

நவ.20: கள்ளக்குறிச்சியில் 69 பேர் உயிரிழந்த விஷச்சாராய வழக்கை சிபிஐக்கு மாற்றி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது.

நவ.20: ராமநாதபுரம் மாவட்டம் ராமேஸ்வரத்தில் மேக வெடிப்பு காரணமாக அதிகன மழை பெய்து 41 செ.மீ பதிவானது.

நவ.20: தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவனை இடைநீக்கம் செய்து ஆளுநர் ஆர்.என். ரவி உத்தரவிட்டார்.

நவ.21: இந்திய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததை மறைத்து முதலீடு பெற்றதாக அதானி குழுமத் தலைவர் கவுதம் அதானிக்கு எதிராக அமெரிக்க நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்தது.

நவ.21: நாள் முழுவதும் செயல்படும் நாட்டின் முதல் ஆன்லைன் நீதிமன்றம் கேரள மாநிலம் கொல்லம் மாவட்டத்தில் செயல்பாட்டுக்கு வந்தது.

நவ.22: காலிஸ்தான் பிரிவினைவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை வழக்கில் பிரதமர் நரேந்திர மோடி, அமைச்சர் ஜெய்சங்கர், இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் ஆகியோரை தொடர்புப்படுத்தி கனடாவின் ‘குளோப் அண்ட் மெயில்’ என்கிற நாளிதழ் வெளியிட்ட செய்திக்கு கனடா அரசு மறுப்பு தெரிவித்து விளக்கம் அளித்தது.

நவ.23: மகாராஷ்டிர சட்டமன்றத் தேர்தலில் பாஜக, சிவசேனா (ஷிண்டே), தேசியவாத காங்கிரஸ் (அஜித் பவார்) தலைமையிலான மகாயுதி கூட்டணி மொத்தமுள்ள 288 தொகுதிகளில் 234 தொகுதிகளைக் கைப்பற்றி ஆட்சியைத் தக்க வைத்தது. காங்கிரஸ், சிவசேனா (உத்தவ்), தேசியவாத காங்கிரஸ் (சரத்பவார்) கட்சிகள் அடங்கிய மகா விகாஸ் அகாடி கூட்டணி 50 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

நவ.23: ஜார்க்கண்ட் சட்டமன்றத் தேர்தலில் மொத்தமுள்ள 81 தொகுதிகளில் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான ‘இண்டியா’ கூட்டணி 56 தொகுதிகளில் வெற்றி பெற்று ஆட்சியைத் தக்க வைத்தது. பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி 24 தொகுதிகளில் மட்டுமே வெற்றி பெற்றது.

நவ.24: சவுதி அரேபியாவின் ஜெட்டா நகரில் நடைபெற்ற ஐபிஎல் ஏலத்தில், இந்திய வீரர் ரிஷப் பந்த் மிக அதிகபட்சமாக ரூ.27 கோடிக்கு ஏலம் எடுக்கப்பட்டார். ஐபிஎல் வரலாற்றில் அதிகபட்ச தொகைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் என்கிற பெருமையைப் பெற்றார்.

தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x