Published : 23 Nov 2024 06:19 AM
Last Updated : 23 Nov 2024 06:19 AM
இதய நோய்களை மேளம் கொட்டி வரவேற்கும் ரத்தக் கொதிப்பு குறித்து விரிவாகப் பார்த்தோம். இப்போது அதற்கு இணையான ஒரு நோய் பற்றி அலசுவோம். அதுதான் சர்க்கரை நோய். பல மாதங்களாகக் காலில் புண் ஆறவில்லை என்று சிகிச்சைக்கு வந்தார் 30 வயதுள்ள கிராமத்து விவசாயி. அவரைச் சர்க்கரை நோய் கடுமையாகப் பாதித்திருந்தது. காலுக்கு ரத்தம் போக வழியில்லை. பாதத்தை அகற்ற வேண்டிய நிர்ப்பந்தம். ரத்தச் சர்க்கரையைக் கட்டுப்படுத்தத் தவறியதால் வந்த விபரீதம் இது.
அவருடைய சிகிச்சை வரலாற்றைக் கவனித்தேன். “உங்களுக்குச் சர்க்கரை நோய் வரச் சாத்தியம் இருக்கிறது; உணவில் கவனம் தேவை. உடற்பயிற்சி முக்கியம்” என்று ஆறு வருடங்களுக்கு முன்பே அவரை எச்சரித்திருக்கிறேன். அவர் அதைக் காதில் போட்டுக்கொள்ள வில்லை. “இந்த வயசிலேயே சர்க்கரை நோய் வருமா, டாக்டர்? காட்டிலும் மேட்டிலும் ராத்திரி பகலா உழைக்கிற உடம்புக்கு இந்த நோய் வராதுன்னு நெனச்சேன்” என்றார் அப்பாவியாக.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT