Published : 09 Nov 2024 06:06 AM
Last Updated : 09 Nov 2024 06:06 AM
நெய்தல் (Nymphae stellata) கொடி, திணையின் ஈரநிலத்தோடு தொடர்புடையது. நெய்தல் கொடிக்குப் பல பெயர்கள் உண்டு- பானல், கருநெய்தல், கருங்குவளை. பொதுவாக நெய்தல் மலர்கள் கருநீல நிறமுடையவை (நீலம், நீலோற்பலம்). எனினும் வெண்மை, சிவப்பு நிறங்களிலும் நெய்தல் மலர்கள் காணக் கிடைக்கின்றன. நெய்தல் கொடி கழிகளின் இருமருங்கிலும் செழித்து வளர்வது. நெய்தலின் பெயருக்குக் காரணமான நெய்தல் கொடி இப்போது காணக் கிடைப்பதில்லை. நெய்தல் நிலம் அதன் இயல்பை இழந்துவருகிறது.
மணற்குன்றுகளின் மீதும் வெண்மணற் பரப்புகளின் மீதும் பசுமை தவழும் அடும்புக் கொடிகள் அடர்ந்து, பரந்து படர்ந்து கிடக்கும். அடும்பின் இலை மான் குளம்புக்கு ஒப்பிடப்படுகிறது; அடும்பு மலர் குதிரையின் கழுத்திலிடும் சங்கிலி மணிக்கு ஒப்பிடப்படுகிறது. அதன் மலர்கள் கத்தரி நிறத்திலிருக்கும். சங்க காலத்தில் கணவனை இழந்தோர் அடும்புக் கொடிபரப்பி, அதன்மீது கைம்மை நோன்பு நோற்பது வழக்கம்.
இந்து தமிழ் திசை தளத்தின் ப்ரீமியம் கட்டுரை இது
மேம்பட்ட இதழியல் அனுபவத்துக்கு சந்தா செலுத்துவதன் நன்மைகள்:
தினமும் பயனுள்ள 20+ ப்ரீமியம் கட்டுரைகள்
சிறப்புக் கட்டுரைகள், இணைப்பிதழ் ஆக்கங்கள்
தடையற்ற வாசிப்பனுபவம்
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT
Be the first person to comment