Published : 07 Oct 2024 06:06 AM
Last Updated : 07 Oct 2024 06:06 AM
ஆன்லைன் மோசடி போய் 'டிஜிட்டல் அரெஸ்ட்' எனும் புதிய மோசடி அதிகரித்து வருகிறது. மருத்துவர்கள், வழக்கறிஞர்கள், நிறுவனத்தின் தலைவர்கள், ஓய்வு பெற்றவர்கள் உள்ளிட்டவர்களை தொடர்பு கொண்டு, உங்கள் பெயரில் சட்டவிரோத செயல் நடைபெறுகிறது என பொய் கூறி மிரட்டி பணம் பறிப்பதுதான் டிஜிட்டல் அரெஸ்ட். இந்த மோசடி பொதுவாக வீடியோ காலில் தொடங்கும். மோசடி ஆசாமிகள் சம்பந்தப்பட்ட தனிநபருக்கு வீடியோ கால் செய்து, அவர்களை டிஜிட்டல் அரெஸ்ட் செய்துள்ளதாக தெரிவிப்பார்கள்.
அமலாக்கத் துறை அல்லது சிபிஐ போன்ற விசாரணை அமைப்புகளிலிலிருந்து பேசுவதாக கூறும் அவர்கள், அதற்கேற்ற சீருடை அணிந்திருப்பார்கள். அடையாள அட்டையை காட்டுவார்கள். அவர்களின் பின்னணியில் புலனாய்வு அலுவலகம் இருக்கும். இதனால், உண்மையான அதிகாரிகள்தான் தங்களை அழைக்கின்றனர் என நம்பி விடுகின்றனர். அதன் பிறகு, இருக்கும் இடத்தை விட்டுநகரக்கூடாது என்றும் மொபைல் போனின் மைக்ரோபோனை ஆன் செய்து வைக்க வேண்டும் என்றும் மிரட்டுகின்றனர். நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததாகக் கூறி காட்டுகின்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT