Published : 30 Sep 2024 06:19 AM
Last Updated : 30 Sep 2024 06:19 AM
‘‘பரவாயில்லை. இப்போதுதான் தங்கத்தின் விலை முதல் முறையாக சவரனுக்கு 3,000 ரூபாய் வரை குறைந்திருக்கிறது. இதே போக்கில் போனால், விலை மேலும் குறையலாம்” என்கிற எதிர்பார்ப்பில் இருந்த மக்களின் மகிழ்ச்சி அதிக நாட்கள் நீடிக்கவில்லை. ஜூலையில் குறைந்த தங்கத்தின் விலை, செப்டம்பர் மாதம் மீண்டும் உயர்ந்துவிட்டது.
இந்தியாவில் தங்கம் உற்பத்தி கிடையாது. பிப்ரவரி 2001-ல் கோலார் தங்க வயல் மூடப்பட்டதிலிருந்து மொத்த தேவைக்கும் இறக்குமதி மட்டும்தான். ஒவ்வொரு ஆண்டும் சுமார் 800 டன்கள் (8 லட்சம் கிலோ) இறக்குமதி ஆகிறது. 2023-24ல் மட்டும் சுமார் 4 லட்சம் கோடி ரூபாய்க்கு (48.8 பில்லியன் டாலர்) இந்தியா தங்கத்தை இறக்குமதி செய்திருக்கிறது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT