Published : 27 Sep 2024 06:22 AM
Last Updated : 27 Sep 2024 06:22 AM
நூறு ஆண்டு வரலாறு கொண்ட செஸ் ஒலிம்பியாட்டில், முதல் முறையாக ஆடவர், மகளிர் என இரண்டு அணிகளும் ஒருசேர தங்கம் வென்றதன் மூலம் இந்தியா மகத்தான சாதனையைப் புரிந்துள்ளது. 2022 இல் சென்னையில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட்டில் இரண்டு அணிகளும் வெண்கலத்தை மட்டுமே கைப்பற்றியிருந்த நிலையில், தற்போது இரண்டு அணிகளும் தங்கம் வென்று சாதித்துள்ளன.
நூறு ஆண்டு வரலாறு: செஸ் ஒலிம்பியாட் என்பது இரண்டு ஆண்டுகளுக்கொரு முறை உலகில் உள்ள பெரும்பாலான நாடுகளைச் சேர்ந்த செஸ் வீரர், வீராங்கனைகள் பங்கேற்கும் மிகப் பெரிய போட்டி. இந்த ஆண்டு ஹங்கேரி தலைநகர் புடாபெஸ்டில் நடைபெற்று முடிந்த செஸ் ஒலிம்பியாட்டில் 190 நாடுகளைச் சேர்ந்த வீரர், வீராங்கனைகள் பங்கேற்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT