Published : 13 Sep 2024 06:06 AM
Last Updated : 13 Sep 2024 06:06 AM

ப்ரீமியம்
தந்தைக்காக சாகசப் பயணம்!

தந்தை கண்ட கனவை நனவாக்கப் பாடுபடும் வாரிசுகளைப் பலரும் பார்த்திருக்கக்கூடும். சொந்த ஊரில் ஒரு பணப் பிரச்சினையால் கலங்கி நின்ற தந்தையைத் தலைநிமிர வைத்திருக்கிறார் ஒரு மகன். ரஷ்யாவில் உள்ள மவுன்ட் எல்பிரஸ் பனி மலையின் சிகரத்தில் ஏறியதன் மூலம் தந்தைக்குப் பரிசளித்திருக்கிறார், கழுகுமலையைச் சேர்ந்த வெங்கடசுப்பிரமணியன் (25). வெங்கடசுப்பிரமணியன் எலெக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேஷன் பொறியியல், எம்.எஸ்.டபிள்யூ படித்தவர். கடந்த ஆண்டு ஊரில் ஏற்பட்ட ஒரு பணப் பிரச்சினையில் தந்தை நல்லசாமி கண்கலங்க வேண்டிய சூழல் ஏற்பட்டது.

அதைப் பார்த்து வேதனை அடைந்த வெங்கடசுப்பிரமணியன், பணத்தைவிட மேலான பரிசு ஒன்றைத் தந்தைக்குத் தர வேண்டும் என முடிவெடுத்திருக்கிறார். அதற்காக ஐரோப்பா கண்டத்தில் உயரமான மலையான, ரஷ்யாவின் மவுன்ட் எல்பிரஸ் சிகரத்தை 24 மணி நேரத்துக்குள் அடைந்து சாதனை படைத்திருக்கிறார்! இதன் மூலம் தன் குடும்பத்துக்குப் பெயர் வாங்கிக் கொடுத்திருக்கிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x