Last Updated : 06 Jul, 2024 06:30 PM

 

Published : 06 Jul 2024 06:30 PM
Last Updated : 06 Jul 2024 06:30 PM

டிஜிட்டல் டைரி 1: ‘மைஸ்பேஸ்’ சேவையை நினைவூட்டும் புது செயலி

சமூக வலைதளத்தில் இரண்டு புது செயலிகள் கவனத்தை ஈர்த்திருக்கின்றன. ஒன்று, இன்ஸ்டகிராமுக்கு மாற்றாக அறிமுகமாகியுள்ள செயலி. இன்னொன்று, சமூக வலைதளப் பயனர்களை அந்தக் கால நினைவுகளில் ஆழ்த்தியிருக்கும் செயலி.

‘எழுத்து’க்கு முக்கியத்துவம்

‘நோஸ்டால்ஜியா’வைத் தூண்டும் அந்தச் செயலி ‘நோபிளேஸ்’ (Noplace). சமூக வலைதளத்தில் காணாமல் போய்விட்ட சமூகத் தன்மையை, மீண்டும் கொண்டு வருவதாக முழங்கும் இந்தச் செயலியை, இப்போதைய ட்விட்டர் (எக்ஸ்), அந்தக் காலத்து ‘மைஸ்பேஸ்’ ஆகியவற்றின் கலவை என்று இணையவாசிகள் வர்ணிக்கின்றனர்.

‘எக்ஸ்’ செயலியின் அம்சங்கள் பற்றி அறிந்திருப்பீர்கள். ஆனால், பெரும்பாலானோருக்கு ‘மைஸ்பேஸ்’ என்பது புரியாதப் புதிராக இருக்கலாம். ‘மைஸ்பேஸ்’ என்பதை ‘ஒரிஜினல் ஃபேஸ்புக்’ என்றும் குறிப்பிடலாம். ஆம், ஃபேஸ்புக் அறிமுகமாவதற்கு முன்பு சமூக வலைதளத்தில் முதன்மையாக இருந்தது, ‘மைஸ்பேஸ்’. தற்போது அதன் அம்சங்களைத்தான் ‘நோபிளேஸ்’ மீண்டும் கொண்டு வந்துள்ளது.

‘நோபிளேஸ்’ பயன்படுத்தும் பயனர்கள் இதில் தங்களது அறிமுகப் பக்கத்தை (புரொஃபைல்) விருப்பத்துக்கேற்ப அமைத்துக்கொள்ளலாம். இந்தப் பக்கத்தின் வண்ணத்தைத் தேர்வு செய்வது, தங்களைப் பற்றிய தகவல்களைத் தெரிவிப்பது என அனைத்தும் அவரவர் விருப்பத்துக்கேற்ப பதிவேற்றலாம்.

இதிலும் நண்பர்களை இணைத்துக்கொள்ளலாம். ஆனால், முதல் பத்து நண்பர்களைத் தனியாகப் பட்டியலிடலாம். ‘மைஸ்பேஸ்’ தளத்தில் 8 நண்பர்களை அப்படிப் பட்டியலிடலாம். அதே போல், பயனர் தனக்குப் பிடித்த பாடல்களையும் அவரது பக்கத்தில் பட்டியலிடலாம். இன்ஸ்டகிராமைப் போல ஒளிப்படங்கள், காணொளிகள் பதிவிட முடியாது. இத்தளத்தில் எல்லாம் எழுத்து வடிவம்தான்.

‘நோஸ்பேஸ்’ தளத்தில் இரண்டு பக்கங்கள், அதாவது ‘டைம்லைன்’ தோன்றும். முதலாவது, பொதுவான டைம்லைன் என்றால், மற்றொருன்று நண்பர்களின் டைம்லைன். இந்தச் செயலியை உருவாக்கியுள்ள டிபானி ஜாங்க், இச்செயலியைப் பயன்படுத்தும்போது ‘அல்கோரிதம்’களின் தலையீடு இருக்காது என்று உறுதியளித்துள்ளார். ஆனால், செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) தொழில்நுட்பத்தின் உதவுயுடன் சுவாரசியமான பதிவுகள் ‘டைம்லைனில்’ காட்சிப்படுத்தப்படும் என்று தெரிவித்துள்ளார்.

‘நோஸ்பேஸ்’ செயலியைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ள: https://www.thenoplace.com/

இன்ஸ்டகிராமுக்கு மாற்று

இரண்டாவது செயலியான ‘கேரா’ (Cara), கலைஞர்களுக்கான இன்ஸ்டகிராமாக உருவாகியுள்ளது. கலைஞர்களுக்கு முழு சுதந்திரம் அளிக்கும் ‘கேரா’ செயலி அத்துறையைச் சேர்ந்தவர்கள் மத்தியில் கவனத்தை ஈர்த்துள்ளது. செயற்கை நுண்ணறிவு பயிற்சி தொடர்பாக ‘மெட்டா’ நிறுவனத்தின் செயல்பாடுகள் கலைஞர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியிருப்பதால், ‘கேரா’ செயலியின் பக்கம் பயனர்கள் மாறத் தொடங்கியுள்ளனர். கலை வழிந்தோடும் ஒரு செயலியைப் பார்க்க விரும்பினால் ‘கேரா’வைப் பதிவிறக்கம் செய்யலாம்: https://cara.app/explore

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x