Last Updated : 02 Jul, 2024 04:52 PM

 

Published : 02 Jul 2024 04:52 PM
Last Updated : 02 Jul 2024 04:52 PM

சேதி தெரியுமா? | Weekly news updates

சேதி தெரியுமா?

ஜூன் 22: போட்டித் தேர்வுகளில் முறைகேட்டில் ஈடுபட்டால் 10 ஆண்டுச் சிறை, ரூ. 1 கோடி அபராதம் விதிக்க வழிவகை செய்யும் சட்டத்தை மத்திய அரசு அமலுக்குக் கொண்டு வந்தது.

ஜூன் 23: நீட் நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு உள்பட முறைகேடுகள் குறித்து சிபிஐ விசாரணைக்கு மத்திய அரசு உத்தரவிட்டது.

ஜூன் 25: மக்களவை எதிர்க்கட்சித் தலைவராக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியை அக்கட்சி நியமித்தது.

ஜூன் 26: மக்கள்தொகை கணக்கெடுப்புடன் சாதிவாரிக் கணக்கெடுப்பையும் மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்தி தமிழகச் சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

ஜூன் 26: பதினெட்டாவது மக்களவையின் தலைவராகத் தேசிய ஜனநாயகக் கூட்டணியைச் சேர்ந்த ஓம் பிர்லா குரல் வாக்கெடுப்பு மூலம் தேர்வு செய்யப்பட்டார். அவரை எதிர்த்து ‘இண்டியா’ கூட்டணி சார்பில் கொடிக்குன்னில் சுரேஷ் போட்டியிட்டார்.

ஜூன் 26: அமெரிக்க ராணுவ ரகசியங்களை உளவு பார்த்த வழக்கில் விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்ச் ஏற்கெனவே சிறைத் தண்டனை அனுபவித்துவிட்டதால், அவர் விடுவிக்கப்பட்டார்.

ஜூன் 26: மதுபானக் கொள்கை முறைகேடு வழக்கில் அமலாக்கத் துறையால் டெல்லி முதல்வர் அரவிந்த கேஜ்ரிவால் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுச் சிறையில் உள்ள நிலையில், அதே வழக்கில் சிபிஐயும் அவரைக் கைது செய்தது.

ஜூன் 28: நீட் தேர்வுக்கு நாடு முழுவதும் எதிர்ப்பு எழுந்துள்ள நிலையில், நீட் தேர்வு விலக்கு மசோதாவுக்கு மத்திய அரசு உடனே ஒப்புதல் தர வலியுறுத்தித் தமிழக சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

- தொகுப்பு: மிது

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x