Published : 23 Jun 2024 07:10 AM
Last Updated : 23 Jun 2024 07:10 AM
மே மாதம் நிகழ்ந்த மிகமிக அரிதான வானியல் நிகழ்வால் பூமியின் துருவப் பகுதிகளில் மட்டுமே பொதுவாகக் காணப்படும் அரோரா (aurora) எனப்படும் துருவ ஒளி, வட அமெரிக்கா, ஐரோப்பா உள்பட உலகின் பல நாடுகளில் தென்பட்டது. சூரியனின் மேற்பரப்பில் உருவான சக்திவாய்ந்த காந்தப்புலம், பூமியின் காந்தப்புலத்துடன் மோதியதால் உருவான சூரியப் புயல், துருவ ஒளியை வழக்கத்துக்கு மாறாக உலகின் பல நாடுகளில் தென்படவைத்தது.
சக்திவாய்ந்த சூரியப் புயலால் உருவாகும் மிகப் பெரிய காந்தப்புலம் பூமியைத் தாக்கும்போது, அது தனது ஒட்டுமொத்த ஆற்றலையும் பூமியின் வளிமண்டலத்தில் இறக்கிவிடுகிறது. அதன் விளைவாக வளிமண்டலத்தில் உள்ள ஆக்சிஜன், நைட்ரஜன் வாயுக்கள் அயனிகளாக மாறி, வளிமண்டலத்தில் ஒளிர ஆரம்பித்து, அரோரா எனப்படும் துருவ ஒளியைத் தோற்றுவிக்கின்றன. அண்டார்க்டிகா, நார்வே, பின்லாந்து போன்ற துருவப் பகுதிகளில் இந்தத் துருவ ஒளி இயல்பான நிகழ்வுதான் என்றாலும், சூரிய வெடிப்பினால் சமீபத்தில் ஏற்பட்ட மாபெரும் காந்தப்புலம், துருவப் பகுதியிலிருந்து பல்லாயிரம் கிலோமீட்டர் தாழ்வாக உள்ள வட அமெரிக்காவின் பெரும்பாலான பகுதிகளிலும் ஐரோப்பாவின் பிரான்ஸ், ஜெர்மனி, நெதர்லாந்து உள்படப் பல நாடுகளிலும் இயல்புக்கு மாறாகத் தோன்றியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT