Published : 13 Jun 2024 07:16 AM
Last Updated : 13 Jun 2024 07:16 AM
சென்னைக்கு அருகில் உள்ள வண்டலூரை அடுத்து ரத்தினமங்கலம் என்ற சிற்றூரில், 4,000 சதுர அடி பரப்பளவில் 5 அடுக்கு கோபுரத் துடன் அமைந்துள்ள குபேர பகவான் கோயில், இந்தியாவிலேயே குபேரனுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரே கோயிலாக போற்றப்படுகிறது.
கோயில் மூலவர் குபேர பகவான், மனைவி சித்ரலேகாவுடன் வலது கையில் பதுமநிதி மற்றும் இடது கையில் சங்கநிதி கொண்டு அருள்பாலிக்கிறார். குபேரன் விக்கிரகத்துக்கு மேலாக லட்சுமி அமர்ந்துள்ளார். இக்கோயிலைச் சுற்றி லட்சுமி கணபதி, குபேரலிங்கம், செல்வ முத்துக்குமரன், யோக ஆஞ்சநேயர், நவக்கிரகங்கள் அருள்பாலிக்கின்றனர். அருகிலேயே கோசாலை உள்ளது.
பிரம்மதேவரின் கொள்ளுப்பேரனும், விஸ்ரவனின் மகனுமான குபேரனுக்கும், ரிதி என்ற சித்ரலேகாவுக்கும் ஜூன் 30-ம் தேதி, காலை 9 மணி முதல் 11 மணிக்குள்ளான முகூர்த்தத்தில் ரத்தினமங்கலம், ஸ்ரீலட்சுமி குபேர தியான மண்டபத்தில் திருக்கல்யாணம் நடத்த, கோயிலை நிர்வகிக்கும் ராஜலட்சுமி குபேரா டிரஸ்ட் மூலம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. மேலும் ஸ்ரீலட்சுமி குபேரரை தங்கள் இல்லத்துக்கு அழைக்க விரும்புபவர்கள் ஜூலை 7-ம் தேதி முதல் ஆகஸ்ட் 24-ம் தேதி வரை அதற்கான ஏற்பாடுகளை செய்து கொள்ளலாம். கூடுதல் விபரங்களுக்கு 9176006176 என்ற அலைபேசி எண்ணைத் தொடர்பு கொண்டு அறியலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT