Published : 11 Mar 2024 06:00 AM
Last Updated : 11 Mar 2024 06:00 AM
நகைக் கடன், வீட்டு வசதி கடன், வர்த்தக நோக்கங்களுக்காக கடன் வழங்கும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக ஐஐஎஃப்எல் உள்ளது. இந்த நிலையில், தங்க நகைப் பிரிவில் புதிதாக கடன்களை வழங்குவதை உடனடியாக நிறுத்துமாறு அந்நிறுவனத்துக்கு ரிசர்வ் வங்கி விதித்துள்ள தடை அதன் வாடிக்கையாளர்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது.
தங்க ஆபரணங்களின் தூய்மையை பரிசோதித்தல், கடன் வழங்கும் நடைமுறை, தவணை கட்ட தவறியவர்களின் நகை ஏலம் உள்ளிட்ட பல்வேறு செயல்பாடுகளில் இந்நிறுவனம் உரிய விதிமுறைகளை கடைபிடிக்கப்படவில்லை என்பது குற்றச்சாட்டாக உள்ளது. மேலும், வாடிக்கையாளர்களின் கணக்குகளில் பிடித்தம் செய்யப்படும் சேவைக் கட்டணங்களில் சீரான கட்டண முறையோ அல்லது வெளிப்படைத் தன்மையோ இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT