Published : 17 Nov 2023 06:25 AM
Last Updated : 17 Nov 2023 06:25 AM
இடதுசாரி வங்கப் படைப்பாளிகளால் 60களில் உருவானது இந்திய ஆவணப்பட இயக்கம். அவர்கள், ரஷ்ய ஆவணப்பட முன்னோடிகளில் முதன்மையானவராக விளங்கிய டிசிகா வியர்த்தோவின் (Dziga Vertov) பாணியில் தாக்கம் பெற்று ஆவணப் படங்களை உருவாக்கினார்கள். பின்னர் எழுபதுகளில் அது மேலும் செழித்து வளர்ந்தது. வங்க இலக்கியத்தின் தாக்கத்துடன் கலைப் படங்களை உருவாக்கிய சத்யஜித் ராய், திரைமொழியின் சாயலோடு ஆவணப்படங்களை உருவாக்கினார். வங்கத்தின் மகாகவி தாகூரின் வாழ்க்கையை அவர் 1961இல் ஆவணப்படமாக வெளிக்கொண்டு வந்தார்.
இது போன்று ஆளுமைகளின் வாழ்க்கையை ஆவணமாக்குவதில் ஆர்வம் செலுத்தாமல், சுதந்திர இந்தியாவின் சிக்கல்களை விமர்சனக் கண்ணோட்டத்துடன் அணுகி, எண்பதுகளின் தொடக்கத்திலிருந்து இந்திய ஆவணப்பட இயக்கத்தைச் செழுமைப்படுத்தியவர் ஆனந்த் பட்வர்த்தன். இன்று தமிழ்நாட்டிலும் ரவிசுப்ரமணியன், ஆர்.பி.அமுதன், திவ்யா பாரதி எனக் குறிப்பிட்டுச் சொல்லக்கூடிய படைப்பாளிகள் வெவ்வேறு களங்களில் இத்துறையில் இயங்கி வருகின்றனர். ஆனால், வங்காளிகளுக்கும் முன்னால், 29 வயதே நிரம்பியிருந்த இளம் தமிழர் ஒருவர், நவீன இந்தியாவின் வரலாற்றைத் தனது எளிய வாழ்க்கையின் வழியாக மாற்றி எழுதிய மகாத்மா காந்தி எனும் மாமனிதரைக் குறித்து ஒரு முழுமையான ஆவணப்படத்தை உருவாக்கினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT