Published : 19 Oct 2023 06:18 AM
Last Updated : 19 Oct 2023 06:18 AM
நம்பிக்கையோடும் பக்தியோடும் தன்னைச் சரணடைந்த பக்தர்களுக்கு நலம் யாவும் அருளும் நாராயணன் எழுந்தருளியுள்ள தலம் மன்னார்கோவில். இத்தலத்தின் ஆதிகாலப் பெயர் வேதபுரி. பொ.ஆ. (கி.பி) 10ஆம் நூற்றாண்டில் சோழர் ஆட்சிக் காலத்தில் வேதங்களைக் கற்றுத் தெளிந்த அந்தணர்களுக்கு இவ்வூர் தானமளிக்கப்பட்டது. எனவே, அந்நாளில் ராஜராஜ சதுர்வேதி மங்கலம் என அழைக்கப்பட்ட இவ்வூருக்குத் தெற்கே, மும்முடிச் சோழப் பேராறு எனப்படும் தாமிரபரணியும் வடக்கே ராஜராஜப் பேராறு என்கிற கடனா நதியும் இருகரை தொட்டு ஓடி இப்பகுதியை வளமாக்குகின்றன.
ஆதியில் இந்த நதித் தீரத்தில் பிருகு முனிவரும் மார்க்கண்டேய மகரிஷியும் விஷ்ணுவின் திவ்ய தரிசனம் வேண்டி பல காலம் தவம் செய்தனர். அவர்களின் பக்தியை மெச்சி இத்தலத்தில் திருமால் அவர்களுக்குக் காட்சியளித்து அருள்புரிந்தார். இதனால் பரவசமடைந்த இருமுனிவர்களும் தேவி, பூதேவி சமேத வேதநாராயணப் பெருமாளை மூலிகைக் கலவை கொண்டு சிலையை உருவாக்கி, பிரதிஷ்டை செய்து, நாளும் வழிபட்டு வரலாயினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT