Published : 07 Jul 2014 04:03 PM
Last Updated : 07 Jul 2014 04:03 PM
பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட சமூகப் பிரிவுகளின் மாணவ, மாணவியருக்கும், ஆங்கில அரசால் குற்றப் பரம்பரை என அறிவிக்கப்பட்டு, தற்போது சீர்ம ரபினர் என்று அழைக்கப்படுகிற சமூகப் பிரிவுகளைச் சேர்ந்த மாணவ,மாணவியருக்கும் +2 படிப்புக்குப் பிந்தைய உயர் படிப்பு களுக்குத் தமிழக அரசு கல்வி உதவித்தொகை வழங்குகிறது.
மேற்கண்ட பிரிவுகளைச் சேர்ந்த மாணவ, மாணவியருக்கு 2012 -2013 கல்வியாண்டு முதல் தமிழக அரசு நிர்ணயித்த தொகையில் கல்விக் கட்டணமும் (tution Fees), சிறப்புக் கட்டணமும் (special Fees) முழுமையாகத் தரப்படுகிறது.
கல்வி உதவித்தொகை பெறத் தேவையான தகுதி ஆண்டுக்கு ஒரு லட்ச ரூபாய் வருமானத்துக்கும் மிகாமல் உள்ள குடும்பங்களை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும். அரசுக் கல்லூரிகள், அரசு உதவி பெறும் கல்லூரிகளில் படிப்பவர்களும் அரசு ஒதுக்கீட்டின் கீழ் தனியார் கல்லூரிகளில் படிப்போரும் இந்தக் கல்வி உதவி தொகையைப் பெறலாம்.
தனியார் கல்லூரிகளில் படிப்போருக்கு அரசுக் கல்லூரி களுக்கு அரசு நிர்ணயித் துள்ள கட்டணங்கள் மட்டும் தரப்படும். மாணவர்கள் கல்லூரியில் பணத்தைக் கட்டிவிட்டுத் தமிழக அரசிடம் கட்டணத்துகான தொகையைத் திரும்பப் பெற்றுக்கொள்ளலாம்.
கூடுதல் விவரங்களுக்கு: http://cms.tn.gov.in/sites/default/files/gos/bcmbc_e_143_2012.pdf (அரசு ஆணை எண் 143, தேதி 24.12.2012).
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT