Published : 05 Dec 2017 11:31 AM
Last Updated : 05 Dec 2017 11:31 AM
தெ
ன்தமிழகத்தில் மீண்டும் பரவலான மழை. காரணம், ‘ஓகி’ புயல். இந்தப் புயலுக்கு வங்கதேசம் பெயரிட்டுள்ளது. வங்க மொழியில் ஓகி என்றால் கண் என்று பொருள்.
அடுத்து இந்தப் புயல் எப்படித் திரும்பும், எங்கெல்லாம் நகரும், எப்போது வலுவிழக்கும் என்பதை வானிலை ஆய்வாளர்கள் உன்னிப்பாகக் கவனித்துக்கொண்டிருக்கிறார்கள்.நாம் விஷயத்துக்கு வருவோம்.
‘அடுத்து என்ன நடக்கும்’, ‘அவரின் அடுத்த நடவடிக்கை என்னவாக இருக்கும்’ என நேரம் கிடைக்கும்போதெல்லாம் ஏதேனும் ஒரு விஷயத்தை அல்லது நபரை நாம் உன்னிப்பாகக் கவனிப்பதை, ஆங்கிலத்தில் ‘Keep an eye out’ என்பார்கள்.
சரி, இந்தச் சொற்றொடர் எப்படி வந்தது? கப்பலில் வந்தது என்று சொன்னால் நீங்கள் நம்பித்தான் ஆக வேண்டும். ஆம், முற்காலத்தில், கப்பல்தான் முக்கியமான போக்குவரத்தாகப் பல நாடுகளிலும் இருந்தது. அப்போது, கப்பலில் பயணிக்கும் மாலுமிகள், கரை தென்படுகிறதா அல்லது வேறு ஏதேனும் ஆபத்து காத்திருக்கிறதா என்பதைத் தெரிந்துகொள்வதற்கு, தொலைநோக்கியைப் பயன்படுத்தினார்கள்.
அப்படி தொலைநோக்கியில் பார்க்கும்போது, ஒரு கண்ணால் மட்டுமே பார்க்க முடியும். இன்னொரு கண், தொலைநோக்கியிலிருந்து விலகி இருக்கும். இவ்வாறு, விலகியிருந்த கண்தான், வரலாற்றில் சொற்றொடராக மாறியது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT