Published : 14 Aug 2023 06:08 AM
Last Updated : 14 Aug 2023 06:08 AM

ப்ரீமியம்
சர்வதேச கவனத்தை ஈர்க்கும் சூரத் வைர வர்த்தக மையம்

வைர வர்த்தகத்தில் உலகின் மையமாக குஜராத் மாநிலத்தின் சூரத் நகரம் உருவெடுக்கவுள்ளது. இந்நகரம் சமீப காலம் வரை சர்வதேச அளவில் வைர மெருகூட்டலுக்கான தலைநகரமாக மட்டுமே அறியப்பட்டு வந்தது. இந்நிலையில் புதிதாக கட்டப்பட்டிருக்கும் அதி நவீன சூரத் வைர மையம் (எஸ்டிபி) விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ள நிலையில்,சூரத் இனி உலக வைர வர்த்தகத்தின் கூரையாக மாறும். உலக நாடுகளில் வெட்டியெடுக்கப்படும் 95 சதவீத வைரங்கள் சூரத் நகரில்தான் மெருகூட்டப்படுகின்றன. இதனால் அது வணிகர்களால் டயமண்ட் சிட்டி என்று அழைக்கப்படுகிறது.

பல தசாப்தங்களுக்கு முன்பு சூரத் நகரில் வணிகத்தை தொடங்கிய ஏழை கைவினைக் கலைஞர்கள் பலர் இன்று கோடீஸ்வரர்களாக மாறியுள்ளனர். தற்போது இந்நகரில் அமைந்துள்ள 6 ஆயிரம் சிறு மற்றும் பெரிய வைரத் தொழில்கள் மூலம் 8 லட்சத்துக்கும் அதிகமானோர் வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர். இந்நிலையில், வைரத்தை வெட்டுதல், பட்டைதீட்டுதல், அதை விற்பனை செய்தல் உள்ளிட்ட அனைத்துச் செயல்பாடுகளையும் ஒரே இடத்தில் ஒருங்கிணைக்கும் வகையில் இந்தப் புதிய கட்டிடம் கட்டப்படுள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x