Published : 14 Jul 2023 06:10 AM
Last Updated : 14 Jul 2023 06:10 AM
இண்ஸ்டாகிராம், முகநூல், யூடியூப் போன்ற சமூக ஊடகங்களில் ஷார்ட் வீடியோக்கள் வந்த பிறகு, கைபேசி கேமராவின் உதவியால் ஆயிரக் கணக்கானவர்கள் நடிகர்கள் ஆகிவிட்டனர். அடுத்த கட்டமாக, அவர்களில் பலரும், சினிமா, தொலைக்காட்சி, குறும்படம் என எதாவது ஒரு காட்சி ஊடகத்தில் நடிக்க வேண்டும் என்கிற ஆசையை வளர்த்துக்கொள்கிறார்கள்.
அப்படிப்பட்டவர்களுக்குப் பயிற்சி அளிப்பதற்காகவே 3 நாள் ‘தியேட்டர் ஆக்ட் ஒர்க்ஷாப்’பை நடத்துகிறார் பிரபல நாடகக் கலைஞரும் நகைச்சுவை, குணசித்திர நடிகருமான டேனியல் ஆனி பாப். ஜூலை 29 முதல் 30 வரை சென்னையில் மூன்று நாள்கள் நடைபெறும் இந்தப் பயிற்சிப் பட்டறையை இயக்குநர் வெற்றிமாறன் தொடங்கி வைக்கிறார்.
ந.முத்துசாமியின் கூத்துப் பட்டறை, ஞாநியின் பரிக்ஷா நாடகக் குழு ஆகியவற்றில் பயிற்சி பெற்ற டேனியல் ஆனி பாப், கடந்த 2006இல் 72 மணி நேரம் தொடர்ந்து ‘நாடக மாரத்தான்’ நடத்தி கின்னஸ் சாதனை படைத்தவர். பிறகு 2013இல் வெளிவந்த ‘இதற்குத்தானே ஆசைப்பட்டாய் பாலகுமாரா’ படத்தில் அறிமுகமாகி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்துவருகிறார்.
தனது பயிற்சிப் பட்டறை குறித்துக் கூறும்போது, “இயற்கையாக அமைந்த குரல் வளம், மொழி வளம், உடல்மொழி ஆகியவற்றைப் பொருத்து ஒவ்வொருவரது நடிப்பு முறையும் மாறுபடுகிறது. அதை மனதில்கொண்டு யாருக்கு எந்தத் திறனில் அதிகப் பயிற்சி தேவைப்படுகிறது என்பதை ஆராய்ந்து அதற்கு ஏற்ப ஒவ்வொருவருக்கும் தனிக்கவனம் செலுத்தி பயிற்சி அளிக்கிறோம்.
இது இரண்டாம் ஆண்டு பயிற்சிப் பட்டறை. முயற்சிக்கு முன் பயிற்சி பெறுவது முக்கியம். பயிற்சிக்கான கட்டணம் பற்றிக் கவலைப்படாமல் 9087000545 என்ற எண்ணில் எங்களைத் தொடர்பு கொள்ளலாம்” என்கிறார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT