Published : 10 Oct 2017 10:51 AM
Last Updated : 10 Oct 2017 10:51 AM
1. உலகிலேயே அதிக மழை பொழியும் இடம் என்கிற சிறப்பைப் பெற்ற ஊர் சிரபுஞ்சி (மேகாலயா மாநிலம்) என்றே இன்னமும் பலர் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். கின்னஸ் உலக சாதனைப் புத்தகத்தின்படி சிரபுஞ்சியை முறியடித்து மேகாலயாவைச் சேர்ந்த மற்றொரு ஊர் அந்தச் சிறப்பை தற்போது பெற்றுள்ளது. அந்த ஊர் எது?
2. மழைக்கும் சங்க இலக்கியத்துக்கும் நிறைய தொடர்பிருக்கிறது. மழை தொடர்பாக இடம்பெற்ற புகழ்பெற்ற சங்க இலக்கியப் பாடல் வரி ஒன்று காதலுக்கு உவமையாகச் சுட்டப்படுகிறது. அந்த வரி எது?
3. பருவமழையைக் குறிக்கும் Monsoon என்கிற ஆங்கிலச் சொல்லின் வேர்ச் சொல் எது? அதற்கான அர்த்தம் என்ன? இந்தியிலும் உருதுவிலும் இதே சொல் உள்ளது. மான்கோ என்கிற போர்த்துகீசியச் சொல்லுக்கும், மான்சொன் என்கிற டச்சுச் சொல்லும் இதே சொல் ஆதாரமாக இருந்ததாக நம்பப்படுகிறது.
4. இந்திய வரலாற்றில் மிகவும் முக்கியமான பருவமழை 1498-ம் ஆண்டு பெய்தது. அந்த ஆண்டு பருவமழையின் முக்கியத்துவம் என்ன? உள்நாட்டு மக்களின் எதிர்ப்பு மட்டுமில்லாமல், கடுமையான பருவமழை ஆபத்தையும் அந்த ஆண்டில் ஒருவர் எதிர்கொள்ள வேண்டியிருந்தது, அவர் யார்?
5. இந்தியாவில் பருவமழை பெய்யும் முறையை முதன்முதலில் ஆராய்ந்த ஐரோப்பியர் யார்? மற்றொரு அறிவியல் துறையிலும் பெயர் பெற்றவர் அவர். எந்த ஆண்டில் இது தொடர்பான அவருடைய ஆராய்ச்சி வெளியானது?
6. மழை எச்சரிக்கை, பருவமழை, பருவநிலை மாற்றம் உள்ளிட்ட வானிலை சார்ந்த ஆராய்ச்சியில் ஈடுபடும் அரசுத் துறையான இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department) எந்த ஆண்டு, யாரால் தொடங்கப்பட்டது?
7. 1950-களில் பருவமழை தொடர்பான தகவல்களை வெளியிடாமல் ரகசியம் காக்க வேண்டுமென மத்தியத் திட்டக் குழு பரிந்துரைக்க நினைத்தது. விநோதமான இந்தப் பரிந்துரைக்குக் காரணம் என்ன?
8. ‘பருவமழையே இந்தியாவின் உண்மையான நிதியமைச்சர்’ என்று குறிப்பிட்ட முன்னாள் நிதியமைச்சர் யார்? இவர் மேற்கு வங்கத்தைச் சேர்ந்தவர்.
9. இந்திய மக்கள்தொகையில் எத்தனை சதவீதம் பேர் பருவமழையை நேரடி வாழ்வாதாரமாகக் கொண்டிருக்கிறார்கள்?
10. பருவமழைக்கு முன்னதாக ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவுக்கு ஒரு பறவை வலசை வருகிறது. குயிலினத்தைச் சேர்ந்த இந்தப் பறவை தமிழகத்துக்கும் வருகிறது. அது என்ன பறவை?
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT