Published : 26 Sep 2017 11:08 AM
Last Updated : 26 Sep 2017 11:08 AM
1. மனித உடலின் மிகப் பெரிய உறுப்பு எது?
2. வெள்ளையாக இருப்பவர்களைவிட, கறுப்பாக இருப்பவர்கள் வெயிலால் தோல் சார்ந்து ஏற்படும் பிரச்சினைகளைக் குறைவாகவே சந்திப்பார்கள். நம் தோலுக்கும் முடிக்கும் நிறத்தைத் தந்து பாதுகாக்கும் அந்தப் பொருளின் பெயர் என்ன?
3. நாம் பிறக்கும்போது இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் வளர்ந்த பிறகு இருக்கும் எலும்புகளின் எண்ணிக்கையும் ஒன்றாக இருக்குமா? வித்தியாசமாக இருக்குமென்றால் அதற்குக் காரணம் என்ன?
4. நமது உடலில் உள்ள மொத்த எலும்புகளின் எண்ணிக்கை 206. இவற்றில் கிட்டத்தட்ட பாதி அதாவது நூற்றுக்கணக்கான எலும்புகளைப் பெற்றிருக்கும் இரண்டு உறுப்புகள் எவை?
5. நம் உடலில் இருக்கும் உறுப்புகளில் வளராமல் ஒரே அளவில் இருக்கும் உறுப்பு எது?
6. மனித உடல் சமநிலையில் இருப்பதற்கு எந்த உறுப்பு பெரிதும் பங்காற்றுகிறது?
7. நமது உடலின் மொத்தச் செயல்பாட்டையும் கட்டுப்படுத்தும் தலைமைச் செயலகம் போலச் செயல்படும் மூளையின் சராசரி எடை என்ன?
8. நாம் உள்ளிழுக்கும் ஆக்சிஜனையும் ஊட்டச்சத்தையும் ரத்தமே உடலெங்கும் எடுத்துச் செல்கிறது. விபத்தில் ரத்த இழப்பு ஏற்பட்டால் பெரும் ஆபத்து ஏற்படுவதற்கு இதுவே காரணம். சரி, மனித உடலின் எடையில் ரத்தத்தின் அளவு மொத்தம் எத்தனை சதவீதம்?
9. ஒவ்வொரு சுவையை உணர்வதற்கு உதவிபுரியும் உறுப்பான நாக்கில் இருக்கும் சுவைமொட்டுகள் நாயைவிடவும், பூனையைவிடவும் மனிதர்களுக்கு அதிகம். நம் நாக்கில் உள்ள சராசரி சுவை மொட்டுகளின் எண்ணிக்கை என்ன?
10. உள்ளுறுப்புகளின் அடிப்படையில் பூச்சிகளின் உடலுக்கும் மனித உடலுக்கும் இடையே உள்ள அடிப்படை வித்தியாசம் என்ன? அந்த வகையில் மனிதர்களுக்கு உள்ள முக்கிய உள்ளுறுப்பு எது?
விடைகள்
1. தோல். மனித உடலை முழுவதும் போர்த்தி மூடியிருக்கும் தோலும் ஒரு உடல் உறுப்பே. சராசரி அளவு 20 சதுர அடி.
2. மெலனின். உடலில் இதன் அளவு அதிகரித்தால் கறுப்பாகவும், குறைந்தால் வெள்ளையாகவும் ஆகும்.
3. பிறக்கும்போது 270, வளர்ந்த பிறகு 206. வளர்ச்சியின்போது பல எலும்புகள் இணைந்துவிடுவதே காரணம்.
4. கால்களும் கைகளும்
5. கண் கருவிழிப் படலம் (Cornea)
6. உட்காதில் அமைந்திருக்கும் வெஸ்டிபுலார் அமைப்பு (Vestibular system). இதில் பிரச்சினை ஏற்பட்டால் நேராக நிற்கவோ, நடக்கவோ முடியாது.
7. 1.5 கிலோ
8. 7 சதவீதம். கிட்டத்தட்ட 4.5 - 5.5 லிட்டர்.
9. 5000
10. பூச்சிகளுக்கு ரத்தக்குழாய்கள் கிடையாது, மனிதர்களுக்கு உண்டு. அவற்றின் உடலில் உள்ளுறுப்புகள் ரத்தத்தில் மிதந்துகொண்டிருக்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT