Last Updated : 13 Dec, 2016 09:29 AM

 

Published : 13 Dec 2016 09:29 AM
Last Updated : 13 Dec 2016 09:29 AM

கேள்வி மூலை - 11: மனிதன் எப்போது பேச ஆரம்பித்தான்?

நம்முடைய மூதாதையர்களான நியாண்டர்தால் காலத்திலேயே மனிதர்கள் பேச ஆரம்பித்துவிட்டார்களா? உலக வரலாற்றின் எந்தக் காலத்தில் மனிதர்கள் பேச ஆரம்பித்தார்கள்?

நியாண்டர்தால் மனிதர்களால் பேச முடியாது என்று 40 ஆண்டுகளுக்கு முன் நம்பப்பட்டு வந்தது. நியாண்டர்தால் மனிதர்கள் குகை ஓவியங்களை வரையவில்லை; சிக்கிமுக்கிக் கல்லை அம்பு முனைகளில் பொருத்தக் கற்றிருக்கவில்லை; மனிதக் குரல்கள் உருவாக்கக்கூடிய அத்தனை ஒலிகளையும் எழுப்பும் வகையில் நியாண்டர்தால் மனிதர்களின் குரல்வளை தாழ்வாக அமைந்திருக்கவில்லை என்றெல்லாம் அப்போது நம்பப்பட்டது.

ஆனால், சமீபகாலக் கண்டறிதல்களின்படி நியாண்டர்தால் மனிதர்களுக்கு ஹயாய்டு எலும்பு (Hyoid bone) எனப்படும் வளையக்கூடிய எலும்பு இருந்தது; நாக்கில் நரம்புகள் இருந்தன; மனிதர்களைப் போன்ற கேட்கும் திறனும் இருந்தது என்று தெரியவந்துள்ளது. இந்த அம்சங்கள் மற்ற பாலூட்டிகளிடமிருந்து வேறுபட்டிருந்ததும் குறிப்பிடத்தக்கது.

எந்த மொழி?

FOXP2 என்ற மரபணு நமக்கும் நியாண்டர்தால் மனிதர்களுக்கும் பொதுவாக இடம்பெற்றுள்ளதும் கண்டறியப்பட்டுள்ளது. பேச்சு, மொழித்திறன்கள் வளர்ச்சி பெறுவதற்கு இந்த மரபணுவே காரணம் என்று கருதப்படுகிறது. இவை எல்லாவற்றையும் வைத்துப் பார்க்கும்போது, நியாண்டர்தால் மனிதர்கள் பேசியிருக்க வேண்டும் என்றே தோன்றுகிறது.

அப்படிப் பேசினார்கள் என்றால், அவர்கள் பயன்படுத்திய மொழி என்ன? பேச்சுக்கும் இசைக்கும் இடைப்பட்ட முன்னோடி மொழியை அவர்கள் பேசியிருக்கலாம் என்று பிரிட்டனைச் சேர்ந்த ரீடிங் பல்கலைக்கழகப் பேராசிரியர் ஸ்டீவன் மிதென் கூறுகிறார். நம் பழங்குடி மொழிகளின் தாத்தாவாக இருந்திருக்குமோ!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x