Published : 24 Nov 2015 12:14 PM
Last Updated : 24 Nov 2015 12:14 PM
சிந்து சமவெளி நாகரிகத்தின் பெரும்பாலான விஷயங்களைப் பற்றி பார்த்துவிட்டோம். அந்த நாகரிகத்தில் மனிதர்கள் மட்டுமல்லாமல் காடும் நிறைய உயிரினங்களும் இருந்திருக்கும். மனிதர்கள் உயிரினங்களைப் பழக்கிப் பயன்படுத்தியும் வந்தார்கள். உயிரினங்களோடு சிந்து மக்கள் எப்படிப்பட்ட உறவைக் கொண்டிருந்தார்கள்? பார்ப்போம்:
# சிந்து சமவெளியில் கிடைத்த ஒரு பொம்மையில் அணில் ஒன்று கொட்டையைக் கொறிப்பது போல உள்ளது.
# பறவைக் குரல்களை எழுப்பும் விசில்கள், வேட்டையாடும்போது பறவைகளை ஈர்க்கப் பயன்படுத்தப்பட்டுள்ளன.
# அந்தக் காலத்தில் இருந்த திமில் கொண்ட எருது (zebu) இன்னமும் இந்தியாவில் இருக்கிறது.
# விவசாயிகளின் பயிர்களைச் சேதம் செய்வதைத் தடுக்க யானைகளை வேட்டையாடித் தாக்கியுள்ளனர்.
# செம்மறி ஆடு, வெள்ளாட்டு கூட்டங்களைப் பாதுகாக்க நாய்கள் பயன்படுத்தப்பட்டிருக்கலாம்.
# அங்குக் கிடைத்த சில செங்கற்களில் பூனைகளின் காலடித் தடங்களைப் பார்க்க முடிகிறது. செங்கல் சுடப்படுவதற்கு முன் பூனைகளின் காலடித் தடங்கள் பதிந்திருக்கலாம்.
# பூனைகள் மட்டுமல்ல குரங்குகளின் காலடித் தடமும் செங்கற்களில் பதிந்துள்ளன.
# குரங்குகளைச் செல்லப்பிராணிகளாகச் சந்தையில் விற்றுள்ளனர்.
# சிந்து சமவெளி முத்திரை ஒன்றில் முதலை ஒரு மீனைச் சாப்பிடுகிறது.
# இங்கு கிடைத்த முத்திரைகளில் குதிரைகளின் உருவம் இல்லை. சிந்து சமவெளியில் கிடைத்ததாகக் கூறப்படும் குதிரை எலும்புகள், காட்டுக் கழுதையின் எலும்புகளாக இருக்கலாம்.
# இங்கு இருந்த ஒட்டகங்கள் இரட்டைத் திமில்களுடன் இருந்திருக்கலாம்.
வெளிநாட்டு தொடர்பு
# சிந்து சமவெளிப் பகுதியிலுருந்து தந்தம், தங்கம், விலைமதிப்பில்லாக் கற்கள், அரிய உயிரினங்களை மெசபடோமியர்கள் வாங்கியுள்ளனர்.
# வளைகுடா நாடுகள் பகுதியில் உள்ள ஓமனில் சிந்து சமவெளியின் சின்னங்கள் கிடைத்துள்ளன.
# வளைகுடா பகுதியில் பஹ்ரைனில் உள்ள தில்மன் என்ற ஊரில் சில சிந்து சமவெளி வணிகர்கள் வாழ்ந்துள்ளனர்.
# பாபிலோனியாவில் பருத்திக்குச் சிந்து என்றே பெயர். சிந்து பகுதியிலிருந்து பருத்தி போனதால், அப்படிப் பெயர் வந்திருக்கலாம்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT