Published : 29 Sep 2015 12:44 PM
Last Updated : 29 Sep 2015 12:44 PM
இந்தியாவில் வேலை தேடி 2013 டிசம்பர் மாதம் வரையிலும் 4.68 கோடிப் பேர் பதிவு செய்துள்ளனர். அவர்களில் 1கோடியே 65 லட்சம்பேர் பெண்கள். ஆனால், 2013-ல் பணி ஒதுக்கப்பட்டவர்கள் 3.49 லட்சம் பேர்கள்தான். அதில் 2.90 லட்சம் ஆண்கள். 0.59 லட்சம் பெண்கள்.
நாடு முழுவதும் அரசின் வேலைவாய்ப்பகங்கள் 978 உள்ளன. அவற்றுக்கு நேரில் போக வேண்டும், பதிவு செய்ய வேண்டும், நடையாய் நடக்கவேண்டும், வேலை கிடைக்கும்வரை அதை விடாமல் செய்ய வேண்டும். தற்போது அந்த நிலை மாறத்தொடங்கியுள்ளது. தேசிய அளவில் இத்தகைய பணிகள் டிஜிட்டல் மயமாகத் தொடங்கியுள்ளன.
இனி, இணையதளத்தில் நேரடியாகப் பதிவு செய்துகொள்ளாம். வேலை தேடுவோருக்கும் தனியார் நிறுவனங்கள் உள்ளிட்ட வேலை தருவோர்களுக்குமிடையே கண்காட்சிகள் நடத்தப்படும். தொழில் வாழ்க்கைக்கான ஆலோசனைகளும் வழங்கப்படும். பல மொழிகளிலும் இவை கிடைக்கும் என்று நிலைமை மேம்பட்டுள்ளது. மேலும் விவரங்களுக்கு: >www.ncs.gov.in
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT