Published : 14 Jul 2015 11:54 AM
Last Updated : 14 Jul 2015 11:54 AM

சமூகத்தை மாற்றும் பாலினவியல் கல்வி

திருச்சி பாரதிதாசன் பல்கலைக்கழகத்தில் மகளிரியல் துறை சார்பில் முதுகலை பாலினவியல் (M.A. GENDER STUDIES) படிப்பு நடத்தப்பட்டு வருகிறது.

சமூகம், பொருளாதாரம், கலாச்சாரம், அரசியல் போன்ற எல்லாத் தளங்களிலும், பாலினப் பாகுபாடுகள் இல்லாமல் சம வாய்ப்பும், உரிமையும் பெறுவதற்கான சமூகக் கோட்பாடே பாலினச் சமத்துவம்.

அதனைப் பாலினவியல் பாடப் படிப்பின் மூலமே புரிந்துணர முடியும். சமூகம் சார்ந்த பல்வேறு கேள்விகளையும் அதற்கான தேடுதல்களையும் தன்னகத்தே கொண்ட படிப்பு இது என்கிறார் பாரதிதாசன் பல்கலைக்கழகத் துணைவேந்தர் வி.எம்.முத்துக்குமார். அவர் மேலும் கூறியதாவது:

வி.எம்.முத்துக்குமார்.

இந்தக் கல்வியாண்டு (2015-16) முதலாகப் பாரதிதாசன் பல்கலைக்கழக, மகளிரியல் துறை பாலினவியல் முதுகலை (M.A.) மற்றும் ஆய்வு நிறைஞர் (M.PHIL) படிப்புகளைத் தொடங்கியுள்ளது.

இதற்கு விண்ணப்பிக்க ஏதாவது ஒரு இளநிலை பட்டப்படிப்பில் 50 சதவீத மதிப்பெண்களுடன் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். ஆண், பெண் மற்றும் திருநங்கையர் விண்ணப்பிக்கலாம். வரும் ஜூலை 31-ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்

பொருளாதார மற்றும் சமுதாயத்தில் பின்தங்கிய மாணவ- மாணவிகளுக்குக் கல்வி ஊக்கத்தொகையும் அளிக்கப்படுகிறது.

இந்தப் படிப்பு படிப்பவர்களுக்குப் பல்கலைக்கழகங்கள், தொண்டு நிறுவனங்கள், உள்ளிட்ட பல இடங்களில் பல்வேறு வேலைவாய்ப்புகள் உள்ளன .

மேலும் விவரங்களுக்கு >www.bdu.ac.in என்ற இணைய முகவரிக்குச் செல்லலாம்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x