Last Updated : 12 May, 2015 01:06 PM

 

Published : 12 May 2015 01:06 PM
Last Updated : 12 May 2015 01:06 PM

சிந்தனைக்கு ஒரு விருது- புலிட்சர்

பத்திரிகை, இசை, நாடகம் உள்ளிட்ட துறைகளில் சிறப்பான பங்களிப்பைத் தரும் அமெரிக்கர்களைக் கவுரவிக்கும் பொருட்டு தொடங்கப்பட்டது புலிட்சர் விருது. அமெரிக்காவில் நாளிதழ் நடத்தியவர் ஜோஸப் புலிட்சர். ஹங்கேரி நாட்டில் பிறந்தவர் அவர். உள்நாட்டுப்போர் காலகட்டத்தில் அமெரிக்காவுக்கு வந்தவர் பத்திரிகையாளராக ஆனார். பின்னர் செயின்ட் லூயி போஸ்ட்-டிஸ்பாட்ச், த நியூயார்க் வேர்ல்டு ஆகிய பத்திரிகைகளின் அதிபர் ஆனார்.

விரியும் விருது

புலிட்சர் தனது மரணத்துக்குப் பிறகு அமெரிக்காவின் கொலம்பியா பல்கலைக்கழகம் ஒரு இதழியல் கல்லூரி தொடங்கவும் அவரின் பெயரால் விருதுகள் வழங்கவும் தேவையான நிதியை ஒதுக்கி உயில் எழுதினார். அவர் மறைந்து ஆறு ஆண்டுகளுக்குப் பின்னர் 1917-ம் ஆண்டில் புலிட்சர் விருது அறிவிக்கப்பட்டது.

முதலில், பத்திரிகைத் துறை உள்ளிட்ட சில துறைகளுக்கு மட்டுமே விருதுகள் வழங்கப்பட்டன. பின்னர் மேலும் பல துறைகளுக்கு விருதுகள் விரிவுபடுத்தப்பட்டன. தற்போது மொத்தம் 21 பிரிவுகளில் விருதுகளும், ஐந்து பிரிவுகளில் ஆய்வு உதவித் தொகைகளும் வழங்கப்பட்டு வருகின்றன.

வென்ற இந்தியர்கள்

மொத்த விருதுகளில் ஒன்றைத் தவிர, ஏனைய விருதுகள் 10,000 அமெரிக்க டாலரும் சான்றிதழும் கொண்டவை. பொதுச்சேவைக்காகப் பத்திரிகைக்கு வழங்கப்படும் விருது மட்டும் தங்கப்பதக்கம் கொண்டது.

ஒவ்வொரு வருடமும் விருதுகளை ஏப்ரல் மாதத்தில் கொலம்பியா பல்கலைக்கழகத்தின் தலைவர் அறிவிப்பதும் மே மாதத்தில் விருதுகள் வழங்கப்படுவதும் வழக்கம். 2015-ம் ஆண்டுக்கான விருதுக்குரியவர்களின் பெயர்கள் கடந்த ஏப்ரல் 20 அன்று அறிவிக்கப்பட்டன.

பெங்களூரில் பிறந்து அமெரிக்காவில் வளர்ந்த கவிஞர் விஜய் சேஷாத்ரி கடந்த ஆண்டில் (2014) டிஸ்ஸப்பியரன்ஸஸ் (Disappearances) என்னும் கவிதை நூலுக்காக புலிட்சர் விருது பெற்றார்.

2011-ம் ஆண்டு அமெரிக்காவில் இரட்டைக் கோபுரங்கள் மீது நடத்தப்பட்ட தாக்குதல் தொடர்பான கவிதைகளைக் கொண்டது இந்த நூல். ஏற்கெனவே சித்தார்த்த முகர்ஜி, கீதா ஆனந்த், ஜும்பா லஹிரி, கோவிந்த் பிஹாரி லால் ஆகிய இந்தியர்கள் இந்த விருதைப் பெற்றுள்ளனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x