Published : 21 Apr 2014 02:03 PM
Last Updated : 21 Apr 2014 02:03 PM
தமிழகத்தில் செயல்படும் மத்திய அரசு அலுவலகங்கள், மாநில அரசு அலுவலகங்கள், அரசுத்துறையின் கீழ் இயங்கிவரும் நிறுவனங்கள், தொண்டு நிறுவனங்கள் ஆகியவற்றில் பல்வேறு மக்கள்நலப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இவற்றைக் குறித்த விவரங்களை எல்லாம் ஒன்று திரட்டி ஒவ்வொன்றும் உதவிடும் உங்களுக்கு என்னும் பெயரில் புத்தகமாக்கி இருக்கிறார் தஞ்சை ந.இராமதாசு.
ஊரக வளர்ச்சித் துறை, உள்ளாட்சித் துறை, வருவாய்த் துறை, விவசாயத் துறை, காவல் துறை, சமூக நலத்துறை, போக்குவரத்துத் துறை உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட துறைகள் தொடர்பான விவரங்கள் திரட்டப்பட்டுள்ளன. ஒரு துறையின் வரலாற்றை விவரித்து விட்டு அதன் செயல்பாடுகள், அதன் நிதி ஆதாரம், அது வழங்கும் விருது போன்ற பல்வேறு விவரங்களை விளக்கமாகச் சொல்கிறது இந்நூல்.
பிறப்புச் சான்று, இறப்புச் சான்று, வாரிசுச் சான்று போன்ற அவசிய அரசுச் சான்றுகளைப் பெற என்னென்ன செய்ய வேண்டும் என விவரித்துள்ளார் ஆசிரியர். மேலும் இந்தச் சான்றிதழ்கள் எதற்குப் பயன்படுகின்றன என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது. தகவல் அறியும் உரிமைச் சட்டம், மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம், நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் போன்ற சட்டங்களின் பயன்பாட்டையும் விளக்கிச் சொல்லியுள்ளார் ஆசிரியர்.
அரசுத் துறையின் மக்கள் நலப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும் என்னும் உந்துதலில் இந்த நூல் உருவாக்கப்பட்டுள்ளது.
ஒவ்வொன்றும் உதவிடும் உங்களுக்கு
தஞ்சை ந. இராமதாசு
வாசன் பிரதர்ஸ் பப்ளிகேசன்,
5/14, முதல் தெரு, பாத்திமா நகர்,
தஞ்சாவூர் 613001
தொலைபேசி: 04632 271271
விலை: ரூ. 150
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT