Published : 03 Mar 2014 12:00 AM
Last Updated : 03 Mar 2014 12:00 AM
பரீட்சை, தேர்வு நாள் அன் றைக்கு பயமோ, பதற் றமோ வேண்டாம். மனது பதற்றமடையாமல் இருந்தால் தான், ஆண்டு முழுவதும் படித் ததை, சிறப்பாக நினைவுக்குக் கொண்டுவந்து எழுத முடியும்.
முந்தைய நாளே ஹால் டிக்கெட், பென்சில், 2 பேனாக் கள், ரப்பர், ஸ்கேல், கணக்குப் பரீட்சைக்கு ஜியாமெட்ரி பாக்ஸ், கர்ச்சீப், தண்ணீர் பாட்டில் உள் ளிட்டவற்றை எடுத்து வைத்து விடுங்கள். காலையில் எதை யும் மறந்துவிடாமல் இருக்கப் பட்டியல் இட்டு, புறப்படுவதற்கு முன் சரிபார்த்துக்கொள்ளுங்கள்.
சாப்பிடாமல் சென்றால், உடல் சுறுசுறுப்பாக இருக்கும் என்று தவறாக நினைக்க வேண்டாம். தேவையான அளவு சாப்பிடவும்.
பரீட்சை தொடங்குவதற்கு ஒன்றரை மணி நேரம் முன்பு பள்ளியை அடைந்துவிட வேண் டும். டிராஃபிக் ஜாம் போன்ற வற்றால் தாமதம் நேரலாம், அத னால் பதற்றமடைந்து பரபரப்பாகச் செல்வது தேவையற்றது.
பரீட்சை தொடங்குவதற்கு அரை மணி நேரத்துக்கு முன்பே, படிப்பதை நிறுத்திவிடுங்கள். அதற்குப் பிறகு படிப்பதால் எந்த மாற்றமும் ஏற்படாது. வீண் அரட்டை வேண்டாம். பரீட்சை ஹாலுக்குள் ரிலாக்ஸாக உட்காருங்கள்.
விடை தெரிந்த கேள்விகளுக் கான விடைகளை முதலில் எழுதிவிடுங்கள். தெரிந்தவற் றுக்கு மதிப்பெண்களை உறுதி செய்வதே நல்லது. குழப்பமாகத் தோன்றுவதைக் கடைசியில் எழுதிக் கொள்ளலாம்.
ஒரு விடையை எழுத எவ்வளவு நேரம் ஆகும் என் பதைக் கணித்து எழுதவும். அரைகுறையாகவோ, நீட்டி முழக்கியோ எழுத வேண்டாம்.
ஒரு கேள்விக்கான விடை என்று புத்தகத்தில் இருப்பதை எழுதுங்கள். கற்பனை பதிலுக்கு மதிப்பெண் கிடைக்காது. அதே நேரம், உரிய பதிலை தனித் துவத்துடன் எழுதினால் நல்ல மதிப்பெண் கிடைக்கலாம்.
ஒரு கேள்விக்கான பதிலை எழுதிக்கொண்டிருக்கும்போது, பாதியில் மறந்துவிட்டது என்றால் பதற வேண்டாம். அதற்குப் போதிய இடத்தை விட்டுவிட்டு, அடுத்த கேள்விக்குப் பதில் எழுதுங்கள். கடைசியில் இதை பார்த்துக்கொள்ளலாம்.
பரீட்சை முடிவதற்கு ஐந்து நிமிடம் முன்னதாக முடித்து விட்டு, எல்லாம் சரியாக இருக்கிறதா என்று சரிபார்த்துக் கொள்ளவும். அதற்குப் பிறகு நேரம் அனுமதித்தால், விடுபட்ட கேள்விகளுக்குச் சுருக்கமாக விடை எழுதலாம்.
உங்கள் உழைப்புக்கு உரிய பலன் கிடைக்கும்! வாழ்த்துகள்!
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT