Published : 10 Jan 2014 12:00 AM
Last Updated : 10 Jan 2014 12:00 AM

பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிப்பு- மதிப்பீட்டு பணிகளை 10 நாளில் முடிக்க ஏற்பாடு

நடப்பு ஆண்டில் பிளஸ்-2 தேர்வு விடைத்தாள் திருத்தும் மையங்க ளின் எண்ணிக்கை 2 மடங்காக அதிகரிக்கப்பட உள்ளது. மதிப்பீட்டு பணிகளை 10 நாளில் முடிப்பதற் காக தேர்வுத்துறை இந்த சிறப்பு ஏற் பாட்டைச் செய்ய திட்டமிட்டுள்ளது.

தேர்வு எழுதும் மாணவர்களின் விவரங்களை ஆன் லைனில் சரிபார்த்து, திருத்தம் செய் யும் பணி நடைபெற்று வருகிறது.

இந்த ஆண்டு எஸ்.எஸ்.எல்.சி., பிளஸ்-2 தேர்வுகளில் பல்வேறு புதிய முறைகள் அறிமுகப்படுத்தப் படுகின்றன. விடைத்தாள் பக்கங் கள் அதிகரிப்பு, மாணவர்களின் போட்டோ மற்றும் பார்கோடு (ரகசிய குறியீடு) அம்சங்கள், தேர்வு அறை களில் மாணவர்களின் எண்ணிக்கை குறைப்பு என பொதுத்தேர்வில் தவறு களும் முறைகேடுகளும் நடந்து விடாமல் இருப்பதற்காக இந்த புதிய நடைமுறைகளை அரசு தேர்வுத் துறை செயல்படுத்த உள்ளது.

இந்த நிலையில், 10-ம் வகுப்பு, பிளஸ்-2 தேர்வுகளை சிறப்பாக நடத்துவது தொடர்பாக ஆசிரியர் சங்க நிர்வாகிகளின் ஆலோசனை களைப் பெறுவதற்கான கருத்து கேட்பு கூட்டம் சென்னை டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத் துறை தலைமை அலுவலகத்தில் சனிக்கிழமை நடந்தது. இதில் அரசு தேர்வுகள் இயக்குநர் கே.தேவ ராஜன், ஆசிரியர் சங்க நிர்வாகிகளு டன் ஆலோசனை நடத்தினார்.

காலையில் நடந்த கூட்டத்தில் மேல்நிலைப் பள்ளி முதுகலை பட்ட தாரி ஆசிரியர் சங்க நிர்வாகிகள், மேல்நிலைப்பள்ளி தொழிற்கல்வி ஆசிரியர்கள் கழக நிர்வாகிகள், மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் கள் சங்க நிர்வாகிகளும் கலந்து கொண்டு பிளஸ்-2 தேர்வை சிறப் பாக நடத்துவது குறித்து தங்கள் கருத்துகளையும் ஆலோசனை களையும் தெரிவித்தனர். தேர்வுப் பணியின்போது துறைத்தலைவர், பறக்கும் படை ஆகிய பொறுப்பு களில் மூத்த ஆசிரியர்களை நியமிக்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

பிற்பகல் நடைபெற்ற கூட்டத்தில் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க நிர்வாகி கள், உயர்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்கள் சங்க நிர்வாகிகள் பங் கேற்று 10-ம் வகுப்பு தேர்வு தொடர் பான ஆலோசனைகளை வழங் கினர். இந்த ஆண்டு ஒவ்வொரு கல்வி மாவட்டத்திலும் (68) பிளஸ்-2 விடைத்தாள் திருத்தும் மையங்கள் அமைக்கவும், மதிப்பீட்டு பணிகளை 10 நாட்களுக்குள் முடிக்கவும் திட்ட மிட்டிருப்பதாக அரசு தேர்வுகள் இயக்குநர் தேவராஜன் ஆலோ சனை கூட்டத்தில் கூறியுள்ளார்.

இது வரை பிளஸ் 2 விடைத் தாள் திருத்தும் மையங்கள் வரு வாய் மாவட்டத்துக்கு ஒன்றும் பெரிய மாவட்டமாக இருந்தால் 2 மையங்கள் என்ற அளவில்தான் அமைக்கப்பட்டிருந்தன.

விடைத்தாள் திருத்தும் மையங் களை இரு மடங்காக அதிகரித்து மதிப்பீட்டு பணிகளை 10 நாளுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டிருப்பதால் பொதுத்தேர்வு முடிவுகளை தேர்வுத் துறை முன்கூட்டியே வெளியிடவும் வாய்ப்புள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x