Last Updated : 06 Oct, 2014 03:08 PM

 

Published : 06 Oct 2014 03:08 PM
Last Updated : 06 Oct 2014 03:08 PM

தொலைந்து போகாத கடிதங்கள்

இரண்டாம் வகுப்பு படித்த ஒரு ஆட்டோ டிரைவர் வெளியிட்டுள்ள புத்தகம் இது. சிறுவயதில் படிக்க வாய்ப்பு இல்லாமல் குழந்தைத் தொழிலாளியாக பணியாற்றியவர் சி.நா.மலையப்பன்.

ஒரு நாள் நீ இப்படியே இருந்தால் எந்த ஊரு பஸ் ஏறுவது என்பதைக்கூட வாசிக்க முடியாதவனாகி விடுவாய் என அம்மா சொன்னதைக் கேட்டு சொந்த முயற்சியில் வாசிக்கக் கற்றுக்கொண்டுள்ளார். ஒரு அச்சகத்தில் சேர்ந்து அங்கிருந்த புததகங்களை எல்லாம் படித்து பொது அறிவு பெற்றுள்ளார்.

தமிழகத்தின் பல்வேறு நாளிதழ்கள், பத்திரிகைகளில் அரசியல் நிலவரங்கள் பற்றிய வாசகர் கடிதங்கள் எழுதி உள்ளார். அவற்றை எல்லாம் தொகுத்து தொலைந்து போகாத கடிதங்கள் என்ற நூலாக வெளியிட்டுள்ளார்.

அந்த நூல் ஒரு விடாமுயற்சியின் உயிர்ப்புள்ள சின்னமாக உள்ளது. வாய்ப்புகள் மறுக்கப்பட்டவர்கள்கூட வைராக்கியமான உறுதி இருந்தால் எத்தகைய தடைகளையும் தகர்த்து தங்களை முன் னேற்றிக்கொள்ள முடியும் என்பதற்கான ஒரு சிறப்பான உதாரணமாகவும் அது இருக்கிறது. இதன் நூலாசிரியர் சி.நா. மலையப்பன் தனது மகனையும் மகளையும் பொறியாளருக்கும், சிஏ படிப்புக்கும் படிக்க வைத்துக்கொண்டிருக்கும் சாதனையாளராக உயர்ந்துள்ளார்.

தன்னம்பிக்கை வேண்டுவோரை ஊக்கப்படுத்தும் நூல்.


தொலைந்து போகாத கடிதங்கள்
ஆசிரியர் சி.நா. மலையப்பன்
2/255, ஈப்பன் நகர்,சின்னாம்பாளையம், பொள்ளாச்சி வட்டம், கோயம்புத்தூர். அலைபேசி: 98433 73404

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x