Published : 05 Jan 2014 12:00 AM
Last Updated : 05 Jan 2014 12:00 AM
சித்தன்ன வாசல் சிற்ப ஓவியம், அஜந்தா, நாளந்தா குடவரை ஓவியங்கள், உலகப் பிரசித்தி பெற்ற மோனலிசா உருவ ஓவியம் என ஓவியக் கலைக்கு பல நூற்றாண்டுகளாக முக்கியத்துவம் இருந்து வருகிறது. உலகம் போற்றும் சிறந்த கலைஞராக உருவாக ஆசைப்படுபவர்களுக்கு சென்னை, பூந்தமல்லி சாலையில் உள்ள கவின் அரசுக் கலைக் கல்லூரியில் கலைத்துறை சார்ந்த பாடப்பிரிவுகள் உள்ளன.
கலைப் படிப்பு படிக்க தனி ஆர்வம் வேண்டும். பொருளாதாரத்தை மட்டும் கருத்தில் கொள்ளாமல், மனதுக்கு பிடித்த படிப்பை படிக்க விரும்புவர்கள் இதனை எடுத்து படிக்கலாம். இதற்கு பெற்றோர் தரப்பில் முழு ஆதரவு அளிக்க மறுக்கும் எண்ணம் தவறானது. எத்துறையிலும் சாதிக்கும் வல்லமை, அத்துறை மீதான ஆர்வத்தால் மட்டுமே முடியும் என்பதை பெற்றோர் அறிந்து கொள்ள வேண்டும்.
அரசு கவின் கலைக் கல்லூரி
1852-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. இதில் பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பில் பல்வேறு படிப்புகள் உள்ளன. வண்ணக் கலை (பெயிண்ட்டிங்) 20 இடங்கள், சிற்பக் கலைக்கு 10 இடங்கள், காட்சி வழி, தொடர்பு வழி அமைப்பு (விஷுவல் கம்யூனிகேஷன் டிசைன்) 20 இடங்கள், பதிப்போவியக் கலை (பிரிண்ட்டிங் மேக்கிங்) 10 இடங்கள், சுடுமண் வடிவமைப்பு (செராமிக் டிசைன்) 15 இடங்கள், துகிலியல் (டெக்ஸ்டைல்ஸ் டிசைன்) 15 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
இக்கல்லூரியில் சேர தனி நுழைவுத் தேர்வு வைக்கப்படுகிறது. பிளஸ் 2 வகுப்பில் இருந்து 50 மதிப்பெண்களும், நுழைவுத் தேர்வில் 50 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண்களை கொண்டு தரவரிசை பட்டியல் வெளியிட்டு இடங்கள் நிரப்பப்படுகின்றன. பேச்சுலர் ஆஃப் ஃபைன் ஆர்ட்ஸ் பட்டப் படிப்பு முடித்தவர்கள், இதே கல்லூரியில் பட்ட மேற்படிப்பு படிக்க வசதி உள்ளது. இரு பாலருக்கான இக் கல்லூரியில் விடுதி வசதி இல்லாததால் வெளியில் தங்கி படிக்க வேண்டும்.
கலைத்துறை படிப்புக்கு வாய்ப்புகள் மிக குறைவு என தவறான கருத்து உள்ளது. இப் படிப்புகளுக்கு ஏராளமான வாய்ப்புகள் உள்ளன. எழுத்துத் துறை, சினிமாத் துறை, விளம்பரத் துறை, கல்விக் கூடங்கள், மல்டி மீடியா அனிமேஷன் இண்டஸ்டிரியல், ஆர்ட் பெயிண்ட் கேலரி, செராமிக் டிசைனர், இண்டீரியல் எக்ஸிபிஷன் டிசைனர், ஃபீரி லேன்சர் பெயிண்ட்டர் என வண்ணக்கலை படிப்பு முடித்தவர்களுக்கு பணி வாய்ப்பு மிகுதியாக உள்ளது.
இவ்வகை படிப்புகளை வெகு சிலரே எடுத்து படிப்பதால் பணி போட்டி கிடையாது.
தனித்திறமையும், மட்டற்ற ஆர்வம் மூலம் ஓவியக் கலையில் தனி முத்திரை பதித்து, பிரபலமாகும் வாய்ப்பும், வளமான வாழ்க்கையும் கைக்கூடும் படிப்பாக உள்ளது. ஆத்ம
திருப்தி, மன லயிப்பு, ஆர்வ மிகுதியால் கலைப் படிப்புகளை படிக்க விரும்புபவர்கள், அரசு நடத்தும் யு.பி.எஸ்.சி., டி.என்.பி.எஸ்.சி. உள்ளிட்ட போட்டி தேர்வுகளில் பங்கேற்று, வாழ்க்கை முறையை மாற்றிக் கொள்ளவும் முடியும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT