Published : 02 May 2017 10:10 AM
Last Updated : 02 May 2017 10:10 AM
கேட்டாரே ஒரு கேள்வி
கிறிஸ்தவர்களின் ‘Holi Festival’ ஆன Christmas என்பதில் Christ என்ற வார்த்தை ஏசுநாதரைக் குறிக்கிறது. ‘Mas’ என்பது எதைக் குறிக்கிறது?
****************
“I live in Adyar only என்பதுபோல சிலர் கூறுகிறார்களே? அது சரியா?”
நண்பரே, நிச்சயம் சரியல்ல. இதன் மூலம் அவர் ஒரே சமயத்தில் இரண்டு மூன்று இடங்களில் வாழும் சக்தி படைத்தவர் என்பது போலவும், இருந்தும் அடையாறில் மட்டுமே வசிக்கிறார் என்பதுபோலவும் பொருள்படுகிறது. இங்கே only என்பது தேவையில்லாதது.
ஒரு வாக்கியத்தில் only என்பதை வெவ்வேறு இடங்களில் பயன்படுத்தும்போது அதன் பொருள் மாறிவிடும்.
****************
‘கேட்டாரே ஒரு கேள்வி’யில் குறிப்பிடப்பட்ட Holi என்பது ஒருவர் மீது ஒருவர் வண்ணத்தை வீசி மகிழும் பண்டிகை.
Holy என்றால் புனிதமான. தீபாவளி, கிறிஸ்துமஸ், பக்ரீத் போன்றவற்றை ‘Holy Festivals’ எனச் சொல்லப்படுகின்றன.
Christmas என்பது Christ-mass என்பதிலிருந்து வந்ததுதான் என்பவர்கள் உண்டு. Mass என்பது குழு வழிபாடு. Mass-க்குச் செல்வது என்பது இறைவனுடன் நேரத்தைக் கழிப்பதாகவும், அவரது அருளைப் பெறுவதாகவும் கருதப்படுகிறது.
****************
“Catch me later” என்றால் என்ன அர்த்தம்?
Catch me later. Catch me some other time - இந்த இரண்டுக்கும் ஒரே பொருள்தான். “பிறகு எனது தொலைபேசி எண்ணைத் தொடர்புகொள்”.
Catch on என்றால் ஒன்றைப் புரிந்துகொள்வது என்று அர்த்தம். Students of this class catch on quickly என்றால், இந்த வகுப்பைச் சேர்ந்த மாணவர்களுக்குக் கற்பூரப் புத்தி.
பிரபலமடைவது என்ற பொருளிலும் catch on பயன்படுத்தப்படுகிறது. Kabbadi caught on quickly during the recent years.
Catch fire என்றால் மிகவும் உற்சாகமடைதல் என்று அர்த்தம் அல்லது பரவலான உற்சாகத்துக்குக் காரணமாக அமைவது என்று பொருள். This idea caught fire all over the state.
Catch up என்றால் வேறொன்றுக்கு அல்லது வேறொருவருக்குச் சமமாக முன்னேற்றம் அடைதல்.
இவற்றையும் தாண்டி வேறு பொருள்களிலும்கூட catch தொடர்பான வார்த்தைகள் பயன்படுத்தப்படுகின்றன.
****************
“America தெரியும். Merica என்று ஒரு வார்த்தை உண்டா? ”
அமெரிக்கா என்பதன் கிண்டலான சுருக்கம்தான் Merica. மிகவும் வழக்கமான (stereotypical) அமெரிக்கக் கொள்கைகள், வழக்கங்கள் போன்றவற்றைக் குறிக்க Merica என்ற வா ர்த்தையைப் பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையைத் தனது பட்டியலில் சமீபத்தில் சேர்த்துக் கொண்டிருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு அகராதி.
அவ்வப்போது இப்படிப் புதிய வா ர்த்தைகளை அந்த அகராதி இணைத்துக்கொள்கிறது. Roald Dahl என்பவர் ஒரு பிரபல எழுத்தாளர், திரைக்கதை ஆசிரியர். ஒருகாலத்தில் போர் விமானியாகவும் இருந்தார். பல திரைப்படங்களுக்கு இவர் திரைக்கதை எழுதியிருந்தாலும் ‘சார்லி அண்டு த சாக்லேட் ஃபேக்டரி’, ‘மடில்டா’ ஆகிய இவரது திரைப்படங்கள் மிகப் பிரபலம். தனது திரைப்படங்களில் பல புதிய வார்த்தைகளை அவர் பயன்படுத்தி இருக்கிறார். அதில் சில வார்த்தைகளை, அவரது நூற்றாண்டு கொண்டாடப்படும் இந்த வேளையில், தனது புகழ்பெற்ற அகராதியில் அங்கீகரித்திருக்கிறது ஆக்ஸ்ஃபோர்டு.
Human being என்பது Human bean என்று திரிக்கப்பட்டு அவரால் கொஞ்சம் கிண்டலாகப் பயன்படுத்தப்பட்டது.
Witching hour என்று அவர் பயன்படுத்திய வார்த்தைக்குப் பொருள் நடு ராத்திரி. அனைவரும் ஆழ்ந்து உறங்கும் நேரம். Human bean, Witching hour ஆகிய வார்த்தைகளும் ஆக்ஸ்ஃபோர்டு அகராதியில் புதிய சேர்க்கையாக இடம்பெறுகின்றன.
தடுக்கி விழுவது, வழுக்கி விழுவது ஆகிய இரண்டையும் ஆங்கிலத்தில் ஒன்று போலத்தான் கூற முடியுமா?
She slipped and sprained her ankle while she was walking down the hall.
He tripped and sprained his wrist while he was getting out of an elevator.
போட்டியில் கேட்டுவிட்டால்?
Bad publicity from _________ customers can be very damaging to an organization.
a) satisfied
b) unsatisfied
c) satisfactory
d) dissatisfied
e) usual
Customers என்றால் வாடிக்கையாளர்கள். இதில் usual என்ற அதிகப்படி வார்த்தை தேவையில்லாதது.
திருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் அந்த நிறுவனத்தைப் பற்றியோ, நிறுவனப் பொருட்களைப் பற்றியோ மோசமாகப் பேசமாட்டார்கள். எனவே satisfied, satisfactory ஆகிய வார்த்தைகள் இங்கு பொருந்தவில்லை.
Dissatisfied என்பதுதான் சரியான வார்த்தை. Unsatisfied என்பதன் பொருள் வேறு.
எனவே Bad publicity from dissatisfied customers can be very damaging to an organization.
வாசகர் விடைகள்
1) When the cat is away, the mice will play.
2) A thousand pounds and a bottle of hay are just the same at doomsday.
3) The squeaky wheel gets the grease.
4) No man is an Island.
5) Heaven is the help of helpless.
6) As you sow, so shall you reap.
மேலே உள்ள ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளை இரு வாரங்களுக்கு முன்புக் கேட்டிருந்தோம். இவற்றுக்கான விடைகள் இதோ.
1) தட்டிக் கேட்க ஆளில்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்
2) காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே
3) அழுத பிள்ளை பால் குடிக்கும்
4) தனிமரம் தோப்பாகாது
5) திக்கற்றவருக்கு தெய்வமே துணை
6) விதை விதைத்தவன் விதை அறுப்பான். வினை விதைத்தவன் வினை அறுப்பான்.
கடைசி நான்கு ஆங்கிலப் பழமொழிகளுக்கு இணையான தமிழ்ப் பழமொழிகளைப் பலரும் எழுதியிருந்தனர். முதல் இரண்டுக்கான இணைப் பழமொழிகளில்தான் குழப்பங்கள்.
‘பூனைக்கு கால்வலின்னா எலிக்கு தீபாவளி’ என்று விஜயன் ஹெலன் கூறியிருப்பது போல் ஒரு பழமொழி இருந்தால் சுவாரசியம்தான். (பூனை இளைத்தால் எலிக்குக் கொண்டாட்டம் என்று ஒரு பழமொழி இருக்கிறதா?)
இரண்டாம் கேள்விக்கு ‘தலைக்கு மேலே வெள்ளம் போனால் ஜாண் என்ன முழம் என்ன’ என்பதை ஓரளவு ஏற்க முடிகிறது.
ஆறு கேள்விகளுக்கும் முழுவதுமாக அல்லது பெரும்பாலும்
ஏற்கும்படியான விடைகளை அனுப்பியவர்கள்
1. பி.சர்புதீன், கோண்டுர், கடலூர்
2. D.விஜய குமார், ஊத்துக்குளி
3. நளினா தேவி, திண்டுக்கல்
4. டாக்டர் ஸ்டீஃபன் லூ, வழக்கறிஞர்
5. ராஜன், மயிலாப்பூர்
சிப்ஸ் > இதுதான் என் destiny என்பது சரியா? அல்லது இதுதான் என் destination என்பது சரியா? Destiny என்பது விதி. Destination என்றால் போக வேண்டிய இடம். நீங்கள் கூற விரும்புவதற்குத் தகுந்தாற்போல் பயன்படுத்தலாம். > Tabloid என்றால் என்ன? பொதுவாக நாளிதழின் பக்க அளவு எவ்வளவோ அதில் பாதியளவு கொண்ட பக்கங்களோடு வெளியாவது. ‘தி இந்து’வின் ஞாயிறு இணைப்பான ‘பெண் இன்று’ ஓர் எடுத்துக்காட்டு. > Alphabetically challenged என்றால்? நிறைய எழுத்துப் பிழைகள் செய்பவரை இப்படிக் கிண்டலாகக் குறிப்பிடுவதுண்டு. |
- தொடர்புக்கு - aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT