Published : 31 Jan 2017 10:31 AM
Last Updated : 31 Jan 2017 10:31 AM
என் அலுவலகத்தில் பேசிய ஒருவர் I do not want to rusticate என்று தொடங்கி ஒரு வாக்கியத்தைப் பேசினார். Rust என்றால் துருப்பிடித்தல். Rusticate என்றால் பயன்படாமல் இருப்பதா?
Gangster என்பது தெரியும். Bangster என்று ஒரு வார்த்தை உண்டா?
Gang என்றால் அது குற்றவாளிகளின் குழு என்று அர்த்தம். Gangster என்றால் அந்தக் குழுவிலுள்ள ஒருவன். Bangster என்றால் மிகவும் வன்முறையான ஒருவன். அதாவது எதிரிகளைத் தாறுமாறாகத் தாக்கி அதில் வெல்பவன் (Bang என்றால் திடீரென்று எழுப்பப்பட்ட ஒரு பெரும் இரைச்சல் ஒலி).
Bankster என்றும் ஒரு வார்த்தை புழக்கத்தில் வந்துவிட்டது. ‘ஓ, நன்றாகவே யூகிக்க முடிகிறது. Gangster என்றால் gang-ல் இருப்பவன். Bankster என்றால் வங்கியில் பணிபுரிபவர்’ என்று நீங்களாகவே ஒரு முடிவுக்கு வந்து வங்கியில் வேலை செய்யும் உங்கள் நண்பரை bankster என்று அழைத்து அவரது கடும் கோபத்துக்கு இலக்காகாதீர்கள். அது நேர்மையற்ற முறையில் பணிபுரியும் வங்கி ஊழியரைக் குறிக்கப் பயன்படுத்தப்படும் கிண்டலான வார்த்தை.
Requirement, Requirements ஆகிய இரண்டில் எதைப் பயன்படுத்த வேண்டும்?
இரண்டுமே ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தைகள்தான். ஆனால், furniture என்பதுதான் ஏற்றுக்கொள்ளப்பட்ட வார்த்தை. Furnitures அல்ல.
‘College student of any age can participate. I will let you know if I come across any requirement’. இதில் ஒரே ஒரு விஷயம் என்பதால் requirement என்பது பொருத்தமாகிறது.
ஒன்றா அதற்கு மேலா என்பது தெரியாத நிலையிலோ, பன்மைதான் என்று தெரிந்தாலோ requirements என்பதைப் பயன்படுத்தலாம்.
What are your requirements to occupy this flat?
‘கேட்டாரே ஒரு கேள்வி’யை எழுதியவர் கூறுவது லாஜிக் போல தோன்றினாலும் அது சரியல்ல. Rusticate என்பது துரு(rust)வை அடிப்படையாகக் கொண்டதல்ல. பரபரப்பான நகரச் சூழலைவிட்டு அமைதியான இடத்திற்குச் சென்று ஓய்வாக இருப்பதை rusticate என்று கூறுவதுண்டு.
ஆக்ஸ்ஃபோர்டு, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகங்களில் ஒரு மாணவனை rusticate செய்தார்கள் என்றால் அவனை சஸ்பெண்ட் செய்தார்கள் என்று அர்த்தம்.
Rustic என்றால் rural, அதாவது கிராமம் தொடர்பான என்று பொருள்.
‘Circe, sphere ஆகிய இரண்டும் ஒன்றுதானா?’ என்ற ஒரு வாசகரின் கேள்வியைப் படித்தபோது இந்த வார்த்தைகளின் பொருள் முறையே வட்டம், கோளம் என்று பலருக்கும் தெரிந்திருக்குமே என்று தோன்றியது.
ஆனால் வாசகரின் ஐயத்தை இரண்டாவது முறை படித்தபோது circle என்ற வார்த்தையில் ‘l’ என்ற எழுத்து விடுபட்டிருப்பது தெரியவர, வாசகர்களிடம் பகிர்ந்து கொள்ள வேறொரு கோணம் பிடிபட்டது.
நிராத் செளத்ரி என்ற இந்திய எழுத்தாளர் எழுதிய Continent of circe என்ற ஒரு நூல் குறித்து முன்பு ஒரு நண்பர் எழுப்பிய கேள்வியும் இப்போது நினைவுக்கு வருகிறது. கீர்க்கி என்றே circe-ஐ உச்சரிக்க வேண்டும். ‘Circe என்றால் வட்டம்தானே? வட்டமான கண்டம் உண்டா, என்ன?’
இந்த ஐயம் யாருக்காவது இருந்தால் அதை உடனடியாகத் தீர்த்துக்கொள்வது நல்லது. காரணம் அந்த வார்த்தையை எங்காவது தப்பாகப் பயன்படுத்தியிருந்தால் விபரீதம் ஆகியிருக்கும். Circe என்பது சிலரை அழிக்க வேண்டும் என்பதற்காக அவர்களைத் தன் காம வலையில் வீழ்த்தும் ஒரு பெண்ணைக் குறிக்கிறது. கிரேக்க மொழியில் இது மாயாஜால சக்திகளுக்கான தேவதையைக் குறிக்கிறது.)
கீழே சில பிரபல ஆங்கில நூல்களின் பெயர்கள் உள்ளன. அவற்றில் அடிகோடிட்ட வார்த்தைக்குச் சரியான பொருள் என்னவாக இருக்கும் என்பதைக் கூறுங்கள்.
1. Dangerous liaison
2. Nightmare abbey
3. Vanity fare
4. Jude the obscure
5. Inferno
விடைகள்
1. ஒருவருடனோ, ஒரு நிறுவனத் துடனோ உள்ள நல்ல தொடர்பு அல்லது ஒருங்கிணைப்பு. Liaison Officer என்று கேள்விப் பட்டிருப்பீர்கள்.
2. பொதுவாக மடாதிபதிகள் அல்லது கன்யாஸ்த்ரீகள் தங்கியிருக்கும் கட்டிடத்தை அல்லது கட்டிடங்களை abbey என்பார்கள்.
3. ஒருவர் தனது தோற்றம் மற்றும் சாதனைகளைக் குறித்து மிகவும் சுய பெருமை கொண்டிருந்தால் அதை vanity என்பார்கள். ‘அவருக்கு ரொம்பதான் vanity’ என்பதுபோல.
4. Obscure என்றால் இன்னமும் அறியப்படாதது என்று அர்த்தம். அதாவது தெளிவில்லாமல் இருப்பது.
5. Inferno என்றால் நரகம் அல்லது நரகம்போன்ற சூழல் என்று பொருள்.
‘He went bananas என்று ஒரு புத்தகத்தில் படித்தேன். Banana என்றால் வாழைப்பழத்தைத் தவிர வேறொரு பொருள் உண்டா?’
மிக அதிகமான கோப நிலையை அல்லது பரவச நிலையை இப்படிக் குறிப் பிடுவதுண்டு. He went bananas when I said I was going to contest in the election.
போட்டியில் கேட்டுவிட்டால்?
The police ________ four states in pursuit of the bank robber.
a)crossed
b)chased
c)travelled
d)journeyed
e)marked
Pursuit என்றால் பின்தொடர்தல் என்று பொருள். ‘The pursuit of happyness’ என்ற ஒரு ஆங்கில திரைப்படத் தலைப்பு பொருள் ‘மகிழ்ச்சியைத் தேடி’ என்பது. In pursuit of his goal, the lawyer searched for legal arguments that might persuade a court.
கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் வங்கிக் கொள்ளையன் ஒருவனைத் தேடிப் பிடிப்பது தொடர்பாக காவல்துறை எடுத்த நடவடிக்கை சுட்டிக் காட்டப்படுகிறது.
Journeyed என்பது அரிதாகப் பயன்படுத்தப்படும் ஒரு வார்த்தை. Travelled, journeyed ஆகிய இரண்டும் கிட்டத்தட்ட ஒரே பொருள் கொண்டவை. ஆனால் காவலர்கள் கொள்ளையனைத் தேடி ‘பயணம் செய்தனர்’ என்பது பொருந்தவில்லை. எனவே இந்த இரண்டு வார்த்தைகளும் சரியானவை அல்ல.
The police chased the bank robber என்றால் சரி. ஆனால் The police chased four states என்பது சரியல்ல. எனவே chased என்ற வார்த்தை பொருத்தமற்றது.
Marked என்ற வார்த்தை ஓரளவு பொருந்துகிறது. ஆனால் ‘நான்கு மாநிலங்களை தாண்டிச் சென்று வங்கிக் கொள்ளையனை பிடிக்கும் முயற்சியில் காவல் துறையினர் இறங்கினார்கள்’ என்பது மேலும் பொருந்துகிறது. எனவே crossed என்பது சரியான தேர்வு.
The police crossed four states in pursuit of the bank robber.
சிப்ஸ்
# Exhume என்றால் தோண்டி எடுப்பதா?
ஆம். புதைக்கப்பட்ட ஒன்றை அல்லது புதைக்கப்பட்ட ஒருவரைத் தோண்டி எடுப்பது. The body was exhumed on the orders of the Judge.
# சிப்ஸ் – ஏன்?
சிப்ஸ் என்பவை சிறியவை. Crisp-ஆன அதாவது, மொரமொரப்பான. அது noun ஆகப் பயன்படுத்தப்படும்போது chips. மின்னணு chips போல குறைந்த இடத்தில் அதிக விஷயங்கள். (அடடா என்னை தற்பெருமைக் குற்றத்துக்கு உள்ளாக்கிவிட்டீர்களே!)
# Meera sat with a long face என்றால்?
மீரா முகத்தை தூக்கி வைத்துக் கொண்டு உட்கார்ந்தாள் என்று அர்த்தம். Long face என்பது அதிருப்தி மற்றும் சோகத்தைக் குறிக்கும் முகபாவம்.
(தொடர்புக்கு - aruncharanya@gmail.com)
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT