Published : 28 Mar 2017 09:56 AM
Last Updated : 28 Mar 2017 09:56 AM
பெரும்பாலான பள்ளிகளில் முழு ஆண்டு பரீட்சைகளெல்லாம் ஓரிரு வாரங்களில் முடிவடைந்துவிடும். அடுத்து விடுமுறைதான். அதை அடுத்து தேர்வு முடிவுகள் வெளியாகும். மீண்டும் பள்ளிக்குச் செல்ல வேண்டும். அதைத் தொடர்ந்து வகுப்புப் பாடங்கள், வீட்டுப்பாடங்கள் என அடுத்த சுற்றுக்குத் தயாராக வேண்டும். இவை அத்தனையும் மாணவர்களாக இருந்து பார்த்தால் ஒருவிதமாகக் காட்சியளிக்கும். அதுவே பெற்றோராக இருந்து பார்த்தால் வேறுவிதமாகத் தோன்றும். கண்ணோட்டம் வேறுபட்டாலும் குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் பதைபதைப்போடுதான் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இது விடுமுறை நாட்களைச் செலவழிக்கும் விதத்தில் தொடங்கி வீட்டுப்பாடங்களை முடிப்பதுவரை நீள்கிறது.
விடுமுறை நாட்கள் முடிவடைந்து மீண்டும் பள்ளி திறக்கும் தறுவாயில் தங்களுடைய குழந்தைகள் குறித்த கருத்தை இதில் பெற்றோர் தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட 52 சதவீதத்தினர் எப்படியாவது வகுப்பில் தங்களுடைய வாரிசுகள் முதலிடம் பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். தன்னுடைய குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் எனப் பெற்றோர் நினைப்பது இயல்புதானே எனத் தோன்றலாம். ஆனால், 50 சதவீதம் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் வம்புச்சீண்டலுக்கோ (Ragging), ஆசிரியர்களின் கண்டிப்புக்கோ அல்லது வேறுவிதமான கொடுமைக்கோ ஆளாகாமல் மகிழ்ச்சியோடு படிக்கும் சூழல்தான் முக்கியம் என்றனர்.
அதேபோல மோசமான நடத்தையை மிகப் பெரிய கவலையாகப் பலர் தெரிவித்தனர். ஆனால், 3 சதவீதத்தினர் தவிர மற்றவர்கள் பிற குழந்தைகளின் நடத்தையில் உள்ள சிக்கல் குறித்த பயத்தைத் தெரிவித்தனரே தவிரத் தங்களுடைய குழந்தைகளின் நடத்தையில் பிரச்சினை இருக்கிறதா எனக் கேட்கவில்லை.
பெற்றோர் மூலமாக
இந்த ஆய்வை மேற்கொண்ட டிஎல்ஜி-யின் தலைவர் டிம் மார்ஃபின், “எப்போதுமே சக மாணவர்களுடன் தங்களுடைய குழந்தைகளை ஒப்பிடும் சுபாவம் பெற்றோரிடம் பரவலாகக் காணப்படுகிறது. சொல்லப்போனால், அதிக மதிப்பெண் பெறும்படி மாணவர்களைப் பள்ளி நேரடியாக நிர்ப்பந்திப்பதைவிடவும் பெற்றோர்களிடையே அந்தப் பதற்றத்தை ஏற்படுத்தி நெருக்கடியை அதிகரிக்கின்றன” என்றார்.
பிரிட்டனைச் சேர்ந்த பெற்றோரின் மனநிலையைத்தான் பெருவாரியான இந்தியப் பெற்றோரும் வெளிப்படுத்துகிறார்கள் என்பதை தனியாகச் சொல்ல வேண்டியதில்லை.
வீட்டுப்பாடம் எனும் சுமை
இதற்கு நேர்மாறான பெற்றோர்களும் உலக நாடுகளில் உள்ளனர் என்பதைச் சமீபத்திய வேறொரு நிகழ்வு காட்டியது. ஸ்பெயின் நாட்டுப் பெற்றோர்கள் 2016 நவம்பரில் நூதனப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்தனர். 12 ஆயிரம் பெற்றோர் மற்றும் ஆசிரியர்களை உள்ளடக்கிய சி.இ.எ.பி.எ. என்கிற அமைப்பைச் சேர்ந்த பெற்றோர்கள், “எங்கள் பிள்ளைகள் மீது வீட்டுப்பாடம் என்னும் சுமையைத் திணிக்காதீர்கள்,” என்று போராடினார்கள்.
அதை அடுத்து ஸ்பெயின், பிரிட்டன், சீனா, பின்லாந்து உள்ளிட்ட நாடுகளில் ஓ.இ.சி.டி. என்கிற சர்வதேச நிறுவனம் வீட்டுப்பாடம் குறித்த ஆய்வை முன்னெடுத்தது. Programme for International Student Assessment என வெளியிடப்பட்ட அந்தக் கணக்கெடுப்பில் ஒரு வாரத்தில் வீட்டுப்பாடத்துக்காக குறைந்தபட்ச நேரம் செலவழிக்கும் நாடாக பின்லாந்தும் (2.8 மணி நேரம்), அதிகபட்ச நேரம் செலவழிக்கும் இடத்தில் சீனாவின் ஷாங்காய் நகரமும் (13.8 மணி நேரம்) இருப்பது தெரியவந்தது.
‘ஒடுக்குபவர்கள் ஒழிக’
பள்ளியில் கற்ற பாடங்களை மீண்டும் வீட்டில் படிப்பது சிறந்த பயிற்சிதானே எனக் கேட்கலாம். வீட்டுப்பாடம் என்கிற முறையின் வாயிலாக மாணவர்களிடம் வெறும் 0.29 சதவீதம் மட்டுமே படிப்பில் முன்னேற்றம் காணப்படுவது இந்த ஆய்வின் இறுதியில் தெரியவந்தது. வீட்டுப்பாடம் படித்தும் ஏன் பிரயோஜனம் இல்லை எனத் தேடியபோது, பெரும்பாலான நேரம் வீட்டுப்பாடம் என்பது படைப்பாற்றலையோ கற்பனைத் திறனையோ ஊக்குவிப்பதில்லை.
வகுப்பில் கற்றதையே மீண்டும் அரைகுறையாகப் புரிந்தும் புரியாமலும் படிக்கும் வழக்கம்தான் அங்கும் தொடர்கிறது. அதிலும் ஸ்பெயின் நாட்டுப் பெற்றோர்கள், “வீட்டுப்பாடம் எங்களுடைய குடும்ப நேரத்தை அபகரித்துக்கொள்கிறது. அந்த நேரத்தை யாராலும் திருப்பித் தர முடியாது. அதனால் பெரிய பிரயோஜனமும் இல்லை,” என வாதிட்டு ‘ஒடுக்குபவர்கள் ஒழிக’ என்றனர்.
வகுப்புப் பாடத்தைப் படித்துத் தேர்வில் அதிகப்படியான மதிப்பெண்களைக் குவிப்பது மட்டுமே கல்வி இல்லையே. அதிலும் கல்வி நிலையம் என்பது சுயமாகச் சிந்திக்கவும், சக மனிதர்களுடன் சமமாகப் பழகவும், நம்மைச் சுற்றி நடப்பவற்றை அவதானித்துப் புரிந்துகொள்ளவும், ஒரு சிறிய கூட்டிலிருந்து சிறகு விரித்து உலகை நோக்கிப் பறக்கவும் கற்றுத்தரும் களமாகவே இருக்க வேண்டும். அதை மதிப்பெண்ணுக்கான பட்டறையாக மட்டுமே சுருக்குவதோ அல்லது அதி அற்புதமான தளமாக மாற்றுவதிலோ பெற்றோருக்கும் முக்கியப் பங்கு நிச்சயமாக உள்ளது. அதை ஒவ்வொரு பெற்றோரும் உணர்ந்து செயல்பட வேண்டியதையே மேற்கண்ட சம்பவங்கள் உணர்த்துகின்றன.
மதிப்பெண்ணா, மகிழ்ச்சியா?
இந்நிலையில் உலக நாடுகளில் உள்ள பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின் பெற்றோர்களிடம நடத்தப்பட்ட சில ஆய்வுகள் கவனம் பெறுகின்றன. எஜுகேஷன் சாரிட்டி டிஎல்ஜி நிறுவனம் இங்கிலாந்திலும் வேல்ஸ் நாட்டிலும் 2016-ல் ஒரு ஆய்வு நடத்தியது.
விடுமுறை நாட்கள் முடிவடைந்து மீண்டும் பள்ளி திறக்கும் தறுவாயில் தங்களுடைய குழந்தைகள் குறித்த கருத்தை இதில் பெற்றோர் தெரிவித்தனர். இதில் கலந்துகொண்ட 52 சதவீதத்தினர் எப்படியாவது வகுப்பில் தங்களுடைய வாரிசுகள் முதலிடம் பிடிக்க வேண்டும் எனத் தெரிவித்தனர். தன்னுடைய குழந்தை படிப்பில் சிறந்து விளங்க வேண்டும் எனப் பெற்றோர் நினைப்பது இயல்புதானே எனத் தோன்றலாம். ஆனால், 50 சதவீதம் பெற்றோர் தங்களுடைய குழந்தைகள் வம்புச்சீண்டலுக்கோ (Ragging), ஆசிரியர்களின் கண்டிப்புக்கோ அல்லது வேறுவிதமான கொடுமைக்கோ ஆளாகாமல் மகிழ்ச்சியோடு படிக்கும் சூழல்தான் முக்கியம் என்றனர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT