Last Updated : 18 Jun, 2019 11:12 AM

 

Published : 18 Jun 2019 11:12 AM
Last Updated : 18 Jun 2019 11:12 AM

ஊக்கமளிக்கும் ஊக்கத்தொகை: நாளைய பெண் அறிவியலாளர்களே!

அறிவியல் துறையில் தடம்பதிக்கும் கனவுடன் கல்லூரி வாழ்க்கையில் அடியெடுத்து வைக்கப்போகும் இளம் பெண்களுக்குக் கல்வி உதவித்தொகை வழங்கவிருக்கிறது லாரியல் இந்தியா நிறுவனம்.

பிளஸ் 2-ல் இயற்பியல்-வேதியியல்-உயிரியல்/ இயற்பியல்-வேதியியல்-கணிதம்/ இயற்பியல்-வேதியியல்-கணிதம்-உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளைத் தேர்ந்தெடுத்துப் படித்த மாணவிகள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

நடந்து முடிந்த பிளஸ் 2 தேர்வில் இந்தப் பாடப் பிரிவுகளில் குறைந்தபட்சம் 85 சதவீதம் மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ. 4 லட்சத்துக்குக் குறைவாக இருத்தல் அவசியம். 2019 ஜூலை 01 அன்று 19 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.

தேர்வாகும் மாணவிகள் மேற்கொண்டு அறிவியல் பிரிவுகளில் பட்டப் படிப்பை மேற்கொள்ளத் தேவையான கல்விக் கட்டணம், இன்ன பிற படிப்பு செலவுக்கென ரூ.2 லட்சத்து 50 ஆயிரம் வரை வழங்கப்படும். ஆன்லைன் வழியாக அல்லது தபால் மூலமாக விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 01 ஜூலை 2019

தபால் விலாசம்: L'Oreal India, The Scholarship Cell, C/O Buddy4Study, Stellar IT Park, C-25, Office No.8,9 & 10 Tower-A, Ground floor, Sector 62, Noida, Uttar Pradesh 201301, India.

கூடுதல் விவரங்களுக்கு:http://www.b4s.in/vetrikodi/LIF9

எம்.பி.ஏ. மாணவர்களுக்கு நிதியுதவி

எம்.பி.ஏ. முதலாமாண்டு படித்துவரும் மாணவர்களுக்கு உதவித்தொகை வழங்கவிருக்கிறது ஐ.டி.எஃப்.சி. ஃபர்ஸ்ட் வங்கி. குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருப்பவர்கள் விண்ணப்பிக்கத் தகுதி வாய்ந்தவர்கள்.

இந்தியாவில் அங்கீகரிக்கப்பட்ட 150 கல்லூரிகளில் (கீழே கொடுக்கப்பட்டுள்ள சுட்டியைச் சொடுக்குக) ஏதோ ஒன்றில் முழுநேர எம்.பி.ஏ. பட்டப் படிப்பைப் படித்துவரும் முதலாமாண்டு மாணவராக இருத்தல் வேண்டும். தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ஆண்டுக்கு ரூ. 1 லட்சம் வீதம் இரண்டாண்டுகளுக்கு உதவித்தொகை வழங்கப்படும்.

விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 31 ஜூலை 2019

விண்ணப்பிக்க:http://www.b4s.in/vetrikodi/IFBMS1

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x