Published : 04 Jun 2019 09:19 AM
Last Updated : 04 Jun 2019 09:19 AM
பட்டதாரியாக உதவித்தொகை
பிளஸ் 2 முடித்தவர்கள் மேற்கொண்டு உயர்கல்வி பெற உதவித்தொகை வழங்குகிறது ரமன் காந்த் முன்ஜால் அறக்கட்டளை.
தகுதி
இதற்கு விண்ணப்பிக்க 31 மே 2019 அன்று 19 வயதுக்கு உட்பட்டவராக இருத்தல் அவசியம். குடும்பத்தின் ஆண்டு வருமானம் ரூ.6 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். குறைந்தபட்சம் 65% மதிப்பெண் பத்தாம் வகுப்பிலும் பிளஸ் 2-விலும் பெற்றிருக்க வேண்டும். டிப்ளமா முடித்தவரானால் 80% பெற்றிருக்க வேண்டும்.
தேர்வுசெய்யப்பட்டவர்கள் மேற்கொண்டு பட்டப் படிப்பு படிக்கவிருந்தால் ஆண்டுக்கு ரூ. 2 லட்சத்து 70 ஆயிரம் உதவித்தொகையாக அளிக்கப்படும். டிப்ளமோ படிப்புகளைப் படிப்பவர்களுக்கு ரூ.50 ஆயிரம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 15 ஜூன் 2019
விண்ணப்பிக்க:
அறிவியல் ஆராய்ச்சிக்கு நிதியுதவி
அறிவியல், பொறியியல் துறையில் வளர்ந்துவரும் ஆராய்ச்சியாளர்கள், இளம் விஞ்ஞானிகளுக்கு இந்திய அரசின் அறிவியல், பொறியியல் ஆராய்ச்சி வாரியம் நிதி உதவி அளித்துவருகிறது.
தகுதி
அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிறுவனத்திலோ ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்திலோ ஆராய்ச்சிகளை மேற்கொண்டுவருபவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம். அறிவியல், கணிதம், பொறியியல் ஆகிய படிப்புகளில் முனைவர் பட்டம் பெற்றவர்கள் அல்லது எம்.டி./எம்.எஸ்./எம்.டி.எஸ்./எம்.வி.எஸ்சி. பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கத் தகுதிவாய்ந்தவர்கள்.
தேர்வுசெய்யப்பட்டவர்கள் அறிவியல் துறைசார்ந்த ஆராய்ச்சிகளை மேற்கொள்ளத் தேவையான கருவிகள் வாங்க, ஆராய்ச்சி தொடர்பான பயணங்கள் மேற்கொள்ள, இன்ன பிற செலவுகளுக்குத் தேவையான நிதியுதவி மூன்றாண்டுகள்வரை வழங்கப்படும்.
விண்ணப்பிக்கக் கடைசி நாள்: 10 ஜூன் 2019
விண்ணப்பிக்க:http://www.b4s.in/vetrikodi/SCRG30
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT