Last Updated : 01 Jan, 2019 11:25 AM

 

Published : 01 Jan 2019 11:25 AM
Last Updated : 01 Jan 2019 11:25 AM

ஆங்கில​ம் அறிவோமே 246: என்னோடு நீ இருந்தால்

“இரண்டு வருடங்களுக்கு ஒருமுறை டாக்டரிடம் சென்று கண் பரிசோதனை செய்து கொள்வேன். அங்கிருக்கும் ஊழியர் ஒருவர் ‘முதல்லே கண்களை dilute செய்யணும்’ என்றவாறே என் இரு கண்களிலும் சொட்டு மருந்தை விடுவார். கண்களை dilute செய்வது என்பது நல்லதா என்ற கேள்வி எனக்குள் எப்போதுமே எழுகிறது. நீங்கள் என்ன சொல்கிறீர்கள்?”

கண்களை dilute செய்வது என்ற பேச்சுக்கே இடமில்லை. Dilute என்றால் நீர்த்துப்போகச் செய்தல். சாத்துக்குடியைப் பிழிகிறீர்கள். அதில் மேலும் மேலும் நீரைக் கலக்கக் கலக்க அதை மேலும் மேலும் dilute செய்கிறீர்கள். Concentration என்பதற்கு எதிர்ச்சொல் என்று dilution-ஐக் கூறலாம்.

கண் மருத்துவமனையில் உங்களுக்குச் செய்யப்படுவது dilation. Dilate என்றால் ஒன்றைப் பெரிதாக்குவது அல்லது அகலப்படுத்துவது என்று பொருள். கண்ணின் பாகங்கள் பெரிதுபடுத்தப்படுவதால் பின்னர் கண் மருத்துவர் நடத்தும் சோதனைக்கு வசதியாகவும் துல்லியமாகவும் இருக்கும்.

Dilatory என்ற சொல்லை இதனுடன் போட்டுக் குழப்பிக்கொள்ளக் கூடாது. Dilatory என்றால் மெதுவாகச் செயல்படுதல் என்று பொருள். While the process must be through, it can’t be dilatory. The process of economic reform has often been dilatory.

***********

இதோ உங்களுக்கான அடுத்த புதிர்ப் போட்டி.

ஒவ்வொரு குறிப்பும் ஓர் ஆங்கிலச் சொல்லைக் குறிக்கிறது. அந்த ஆங்கிலச் சொல்லை உச்சரிக்கும்போது அது ஓர் ஆங்கில எழுத்தைப் போலவே இருக்கும்.

எடுத்துக்காட்டு, முதல் குறிப்புக்கான விடை - ‘S’ (Yes). இதேபோல கீழே உள்ள அனைத்துக் குறிப்புகளுக்குமான ஆங்கில எழுத்துக்களைக் கண்டுபிடியுங்கள்.

உங்கள் விடையை உடனடியாக அனுப்புங்கள். உங்கள் பெயர், ஊர் இரண்டும் தேவை. மாணவர், வழக்கறிஞர், பேராசிரியர், இல்லத்தரசி என்பதுபோல் உங்களைப் பற்றிய ஒரு சொல் குறிப்பையும் குறிப்பிடலாம். ஒரு குறிப்புக்கு ஒரே விடைதான் எழுத வேண்டும்.

1. ஆமோதிப்பு

2. ஜப்பானிய நாணயம்

3. கட்டுப்பாடுக்கு எடுத்துக்காட்டு

4. ஒருவகைப் பூச்சி

5. நீங்களும், நானும் இணைந்தால்

6. ஒரு கேள்விச் சொல்

7. ஒரு நிரலாக்க மொழி

8. இலங்கை இந்த தானத்தில் முன்னணியில் இருக்கிறது

9. ‘என்னோடு நீ இருந்தால் உயிரோடு நான் இருப்பேன்’.

10. முன்னாள்

11. தமிழருக்கு ஐயா, வட இந்தியருக்கு?

12. உருளை வடிவத்தில் உள்ள பருப்பு வகை

english-2jpgright

13. சுனாமியின் தாயகம் எந்த எழுத்துக்கு நடுக்கம் ஏற்பட வாய்ப்பு உண்டு? B. ஏனென்றால் அது A,C-க்கு நடுவே இருக்கிறது. இந்தத் தர்க்கத்தின் அடிப்படையில் கீழே உள்ள குறிப்புகளுக்கான விடையை எழுதுங்கள்.

14. எந்த எழுத்துக்கு புற்றுநோய் வர வாய்ப்பு அதிகம்?

15. எந்த எழுத்துக்குக் கண்கள் களைப்படைய வாய்ப்பு உண்டு?

***********

Mask என்றால் முகமூடி. இது முகம் முழுவதையும் மறைக்கும் (கண்கள், மூக்கு துவாரம் வாய் தவிர).

Surgical Mask என்பதைப் பொதுவாக டாக்டர்கள் அறுவை சிகிச்சையின்போது அணிந்துகொள்வார்கள். மூக்கு, வாய்ப் பகுதிகள் இதில் மூடப்பட்டிருக்கும். இந்த முகமூடி மெல்லிய கயிறு அல்லது நாடாவால் பின்புறம் கட்டப்பட்டிருக்கும். தொற்று வியாதி பரவக்கூடிய இடத்தில் தாதிக்கள்கூட இதை அணிந்திருப்பார்கள். அதை அணிவதன் காரணமாக காற்றால் பரவும் நோய்கள் பெருமளவு தடுக்கப்படுகின்றன.

***********

Outsider என்றால் அறிமுகமாகாதவர் என்றுதானே அர்த்தம் என்று கேட்கிறார் வாசகர் ஒருவர். அப்படியும் வைத்துக்கொள்ளலாம். ஒரு குழுவில் சேர்த்துக் கொள்ளப்படாதவர் அல்லது உறுப்பினர் அல்லாதவர் என்றும் கொள்ளலாம். விருந்தாளி அல்லது விசிட்டர் ஆகியோரையும் அப்படிக் குறிப்பிடலாம்.

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x