Last Updated : 25 Dec, 2018 10:33 AM

 

Published : 25 Dec 2018 10:33 AM
Last Updated : 25 Dec 2018 10:33 AM

ஆங்கில​ம் அறிவோமே 245: அரைகுறைங்கிறத முழுசா தெரிஞ்சிக்குவோமே!

கேட்டாரே ஒரு கேள்வி

Lionize என்றால் மிக அதிகப் பலனை எடுத்துக்கொள்வது என்று அர்த்தமா?

**********

“How are you?” என்று ஒருவரைக் கேட்டேன்.  பொதுவாக ‘fine’  என்றுதான் பதில் அளிப்பார்கள்.  ஆனால், அந்த நண்பர் “I have been better” என்று பதிலளித்தார்.  இதற்கு என்ன பொருள்?

“எப்படி இருக்கீங்க?” என்று ஒருவர் கேட்கும்போது நீங்கள் “நல்லாத்தான் இருந்தேன்” என்று கூறினால் அதற்கு என்ன அர்த்தம்? இப்போது இருப்பதைவிட முன்பு நன்றாக இருந்தேன் என்றுதானே அர்த்தம்?  அதாவது இப்போது நீங்கள் நன்றாக இல்லை என்பதை மறைமுகமாக உணர்த்துகிறீர்கள். இது உடல்நலம்,  மனநலம் தொடர்பானதாக இருக்கலாம். 

இதைத்தான் “I have been better” என்பது உணர்த்துகிறது.  அதாவது ‘I am not better”.

**********

Lion’s share என்றால் பெரும் பங்கு என்று பொருள் உண்டு.  ஆனால், lionize என்றால் மிக அதிகமாக ஒருவரைப் புகழ்வது.  தெய்வத்துக்குச் சமமாக எனலாம். அரசியல்வாதிகளுக்காக வைக்கப்படும் Flex board-களில் காணப்படும் விளிப்புகள் இந்த வகை. The Football fans lionized Messi.

**********

Flea என்றாலும்,  Fly என்றாலும் ஒரே உயிரினம்தானா?

Fly என்பது ஈ. 

Flea என்பது இறக்கையற்ற உயிரினம்.  என்றாலும், அதன் மூன்று ஜோடிக் கால்களைக் கொண்டு வெகு தூரத்துக்குக் குதிக்கக்கூடியது. Flea என்பதை உண்ணி, தெள்ளுப்பூச்சி என்றெல்லாம் அழைப்பார்கள்.

english-2jpg100 

அரைகுறை என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்? “எனக்கு ஆங்கிலம் அரைகுறையாகத்தான் தெரியும்.  எனக்கு வேலை அரைகுறையாகத்தான் தெரியும்”   இவற்றையெல்லாம் எப்படி மொழி பெயர்ப்பது? தனிச் சொல் என்ற கோணத்தில் அரைகுறை என்பதை incomplete  என்று கூறலாம்.

வாக்கியங்களாக I am not well versed in English எனலாம்.  English is not my forte என்று கூறலாம்.  I do not have a command over English எனலாம்.

I am not versatile with the work எனலாம்.  I do not have full knowledge about the work எனலாம் (ஆனால், command over language என்று வருமே தவிர, command over work என்று வராது).

**********

“It is apples and oranges” என்கிறார்களே, இதற்கு என்ன அர்த்தம்?

ஒப்பிட முடியாத, ஒப்பிடக்கூடாத இரண்டு விஷயங்களை “it is apples and oranges” என்ற idiom  மூலமாக வெளிப்படுத்துவதுண்டு. 

சிப்ஸ்

# Sit tight என்றால்?   

காத்திருத்தல். “Just relax and sit tight.  I will be with you”.

# No two ways about it என்றால்?

‘சாய்ஸே’ இல்லை என்பதுதான்

# Coat என்பதற்கும், overcoat என்பதற்கும் என்ன வேறுபாடு?

இரண்டும் ஒன்றுதான்.

 

தொடர்புக்கு: aruncharanya@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x