Last Updated : 23 Oct, 2018 11:38 AM

 

Published : 23 Oct 2018 11:38 AM
Last Updated : 23 Oct 2018 11:38 AM

ஆங்கிலம் அறிவோமே 234: கேட்டாரே ஒரு கேள்வி

மின்சார ரயிலில் சென்று கொண்டிருந்தபோது ஒருவர் தன் நண்பரிடம் ஒரு நாளிதழைச் சுட்டிக் காட்டியபடி “Gymnasts suffer from vestiphobia என்பதற்கு என்ன பொருள்?’’ என்று கேட்டது என் காதுகளில் விழுந்தது. அந்த நண்பருக்கு விடை தெரியவில்லை. வீட்டுக்கு வந்ததும் அகராதியைப் புரட்டி vestiphobia என்ற வார்த்தையின் அர்த்தத்தை அறிந்தபோது அதிர்ச்சியாக இருந்தது. எதற்காக அந்த நாளிதழ் ஜிம்னாஸ்டிக்ஸ் வீரர்களை இழிவுபடுத்த வேண்டும்?

***************

“அமெரிக்க Sitcom என்று ஓரிடத்தில் படித்தேன். Visual Communication-ஐ Viscom என்கிறோமே. அதுபோல Sitcom என்பதும் ஏதாவது படிப்பா?”

இல்லை நண்பரே. Sitcom என்பது Situation Comedy என்பதன் சுருக்கம். அதாவது மையமாகச் சில கதாபாத்திரங்கள் வழியாக நகைச்சுவை தொடர்ந்து இடம்பெறும் தொலைக்காட்சித் தொடரை Sitcom எனலாம். கே.பாலசந்தரின் இயக்கத்தில் வெளியான தொலைக்கா​ட்சித் தொடர்களான ‘வீட்டுக்கு வீடு வாசல்படி', ‘ரமணி Vs ரமணி ' போன்றவை நினைவுக்கு வருகின்றன. ‘சின்னப் பாப்பா', பெரிய பாப்பா'வை இந்தப் பட்டியலில் சேர்ப்பது உங்கள் விருப்பம்.

***************

Vestiphobia என்பது உடை உடுத்துவதைப் பற்றிய அளவுக்கு அதிகமான பயம். உடை அணியாத அல்லது மிகக் குறைவான உடை அணியும் சிலவகைப் பழங்குடி இனத்தவர்களுக்கு இதுபோன்ற பயம் இருக்கக்கூடும். காரணம் அவர்கள் வளர்ந்த விதம்.

இப்போது gymnastics, gymnasts என்றெல்லாம் நாம் குறிப்பிடுவது ஒரு குறிப்பிட்ட விளையாட்டையும் அதில் கலந்துகொள்ளும் வீரர்களையும்தான். ஆனால், கிரேக்க மொழியில் gymnos என்றால் ‘ஆடைகளற்ற’ என்றுதான் பொருள். அந்தக் கால ஒலிம்பிக்ஸில் போட்டியாளர்கள் ஆடைகள் அணியாமல்தான் கலந்து கொண்டார்கள். Gymnazein என்றால் உடைகள் அணியாமலேயே பயிற்சி எடுத்துக்கொள்வது என்பதுதான்.

சிலவகை phobia உள்ளவர்களின் வாக்குமூலங்கள் ​கீழே உள்ளன. ஒவ்வொருவருக்கும் இருப்பது என்ன phobia என்பதைக் கண்டுபிடியுங்கள் பார்க்கலாம்.

விடைகள் இந்தப் பகுதியிலேயே உள்ளன.

1.“என்னைப் பார்த்தாலே எல்லாரும் முகம் சுளிக்கிறாங்க. என்கி​ட்டே வருவதைத் தவிர்க்கிறாங்க”.

2.“நாலு மாடின்னாலும் நான் நடந்துதான் போவேன். லிஃப்டிலே போக அவ்வளவு பயம்”.

3.“பிறப்புன்னு இருந்தால்

இறப்பு​ம் உண்டுதான். ஆனால், செத்துடுவேனோன்னு நினைச்சாலே ரத்தக் கொதிப்பு அதிகமாகுது’’.

4.“எப்படியாவது பாஸாகணும். ஃபெயில் ஆயிடுவேனோன்னு நெனச்சாலே ​மூச்சு முட்டுது. தற்கொலை செய்து கொள்ளலாம்னு தோணுது”.

நண்பர்களே, உங்களுக்கு ஏதாவது பதகளிப்புக் கோளாறு உண்டா? “ஐயோ, களிப்பு தெரியும், ஆனா பதகளிப்பு தெரியாதே’’ என்று பதற்றப்படா​​தீர்கள். ‘பதகளிப்புக் கோளாறு’ என்றால் Phobia. (பதகளிப்பு என்றால் anxiety).

***************

Autonym என்றால்?

ஒரு சொல் தன்னையே விளக்கிக்கொள்ளும்படி அமைந்துவிட்டால் அது autonym. Mispelled என்று எழுதினால் அந்த சொல்லே ஒரு autonym-தான். Misspelled என்பதுதான் சரியான வார்த்தை.

சுஜாதா அவன் படிகளில்

இறங்கினான் என்பதை

ங்

கி

னா

ன்

என்று குறிப்பிட்டிருப்பார். Autonym!

***************

மேலே குறிப்பிட்டவர்களுக்கு இருக்கும் ​phobias இவையாக இருக்க வாய்ப்பு அதிகம்.

1. Ablutophobia – குளிப்பதற்கு அதீத பயம்

2. Claustrophobia – மூடிய இடங்களுக்குள் இருக்க அதீத பயம்.

3. Thanatophobia – இறப்பு குறித்த அதீத பயம்

4. Atychiphobia – தோல்வி குறித்த அதீத பயம்

வெற்றி முகங்கள்

ஆங்கிலம் அறிவோமே 234-ல் வெளியான நாடுகளைக் கண்டுபிடிக்கும் போட்டியில் வழக்கத்தைவிட மிக அதிகமானவர்கள் பங்கேற்றது மகிழ்ச்சியைத் தருகிறது. சரியான விடைகள் இதோ.

1. சுரப்பி - England (gland)

2. காதல் - Slovenia (love)

3. நுண்துளை - Singapore (pore)

4. மழை - Bahrain (rain)

5. மதிப்பெண் - Denmark (mark)

6. கிருமி - Germany (germ)

7. கந்தல் - ​Paraguay (rag)

8. இஸ்ரேலில் இயங்கும் ஒரு பிரபல தீவிரவாத இயக்கம் – Bahamas (Hamas)

9. குடிசை - Bhutan (hut)

10. மந்திரக்கோல் - Rwanda (wand)

11. வழி - Norway (way)

12. கனவானின் சுருக்கம் - Argentina (gent)

13. முகவாய்க்கட்டை - China (chin)

14. ஆலங்கட்டிமழை - Thailand (hail)

15. காத்திரு - Kuwait (wait)

16. துறைமுகம் - Portugal (port)

பலரையும் திணறடித்திருக்கக்கூடிய கேள்வியாக 12-வது குறிப்பு அமைந்திருப்பது புரிகிறது. Sri Lanka என்ற விடையும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. ஆனால், Romania, France, Siriya (நாட்டின் பெயர் Syria) போன்றவற்றை ஏற்கமுடியவில்லை. Gent என்பதை மேலும் சுருக்கி ‘Gen’ என்பதை பரிசீலனைக்கு உட்படுத்தினாலும் Geneva என்பது நாடு இல்லையே! 11-வது கேள்விக்கு Bolivia என்பதும் ஏற்கத்தக்க விடைதான்.

போட்டி வெளியான அன்று காலை 6.30 மணிக்கே கள்ளக்குறிச்சி ‘ஆர்த்தோ’

டாக்டர் குமரேசனிடமிருந்து விடைகள் வந்துவிட்டன! முதல் நாளில் வந்த விடைகளில் முழுவதும் சரியான விடையை எழுதியவர்களின் பட்டியல், வந்து

சேர்ந்த வரிசையில், கீழே உள்ளது.

வாழ்த்துகள்.

1. S.கிருஷ்ணன், வேளச்சேரி

2. K.P.ராஜேஸ்வரன், கம்பம்

3. சுவாமிநாதன் நீலகண்டன்,

வழக்கறிஞர், கோவை

4. A.ஜரிஃபா, கிரேஸ்லின், ​தூத்துக்குடி

5. சுகுமார், ஜெ., தர்மபுரி

6. R.முருகேசன், திருவையாறு

7. S.மீனாட்சிசுந்தரம், பாவூர்சத்திரம்

8. லட்சுமி பிரியா, சென்னை

9. லிலனி சங்கர், மதுரை

10. C.V.வெங்கட்ராமன்,

கே.கே.நகர், சென்னை

11. டாக்டர் T.சுந்தரேசன், அரக்கோணம்

12. A.புவனேஸ்வரி, கோயம்புத்​​தூர்

13. ரெ.செல்வசங்கர், கிழக்கு தாம்பரம், சென்னை

14. D.விஜயகுமார், ஊத்துக்குளி, திருப்பூர்

15. A.கிறிஸ்டினல் மேரி, சென்னை

16. ராஜமாணிக்கம்

17. நாகராஜன்

18. C.D.கிருபாகரன், பாண்டிச்சேரி

19. டாக்டர் R.செல்வரங்கம், சேலம்

20. C.ரவிச்சந்திரன், உறையூர், திருச்சி

21. மாரி கார்த்திக், திருவனந்தபுரம்

22. S.குமார், தேன்கனிக்கோட்டை

23. B.ஐஸ்வ​ர்யா, ராணிப்பேட்டை

24. கிரிபாபு, திருச்சி

25. ஃஸ்டெபினா

26. ம.அமரா அதிபன், புவனகிரி

27. P.​அசோகன், பம்மல், சென்னை

28. நித்தின் ஆகாஷ்

29. A.தனலட்சு​மி, போடிநாயக்க​னூர், தேனி


தொடர்புக்கு - aruncharanya@gmail.com |
ஓவியம்: வெங்கி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x