Last Updated : 26 Jun, 2018 11:48 AM

 

Published : 26 Jun 2018 11:48 AM
Last Updated : 26 Jun 2018 11:48 AM

கிராஃபிக் நாவலாகப் பிரபஞ்சம்

அவள்: அழகுன்னா என்னன்னு நீ விளக்கம் கொடு… அதுக்கப்புறம் நான் உன்னை நம்புறேன்.

அவளுடைய மைண்ட் வாய்ஸ்: இப்படிக் கேட்கறதுக்குப் பதிலா அழகான ஒரு நபரை வர்ணிக்கச் சொல்லி இருக்கலாமோ!

அவனுடைய மைண்ட் வாய்ஸ்: பதில் சொல்லும்போது ரொம்ப கவனமா இருடா!

இதில் இருந்து அறியப்படும் அறிவியல் – அழகு என்பது முற்றிலும் தனிநபரின் பார்வையைப் பொறுத்தது. அதனால்தான் ‘Cosmology’-யை அறிவியல் என்கிறோம், ஆனால், ‘Cosmetology’-ஐ அப்படிச் சொல்வதில்லை.

26CH_Book

இது, ‘The Dialogues: Conversations about the Nature of the Universe’ என்ற பிரபஞ்சத்தின் அறிவியல் குறித்த கிராஃபிக் நாவலின் ஒரு பத்தி. அரசியல் நிகழ்வுகளைப் பற்றி அன்றாடம் அரட்டையடிக்கிறோம். அதேபோல நட்சத்திரம், நேரம், விண்வெளி, குவாண்டம் மெக்கானிக்ஸ் என அண்டசராசரத்தைப் பற்றியும் அனைவரும் சகஜமாக உரையாடவைப்பது எப்படி என்று யோசித்தார் தெற்கு கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தின் பேராசிரியரும் இயற்பியலாளருமான கிளிஃபோர்டு ஜான்சன்.

பிரபஞ்சம் பற்றிய கடினமான கருத்தாக்கங்களை எளிமையாகவும் சுவாரசியமான கதையோட்டத்தோடும் நகைச்சுவையாகவும் வண்ண ஓவியங்களுடன் ஒரு காமிக்ஸ் புத்தகமாகப் படைத்திருக்கிறார். கடந்த ஆண்டு அமெரிக்காவில் வெளியிடப்பட்ட இந்தப் புத்தகம், தற்போது இங்கிலாந்தில் வெளியாகி இருக்கிறது. நூலை வாசிக்கத் தூண்டும் விதமாக அதன் சில பக்கங்களை டிரெய்லராக யூடியூபில் வெளியிட்டு இருக்கிறார்கள்.

எம்.ஐ.டி. பிரஸ் வெளியிட்டிருக்கும் இந்தப் புத்தகத்தைத் ஆன்லைன் மூலமாகவே வாங்க முடியும். கொஞ்ச காலம் பொறுத்தால் வியப்பூட்டும் விண்வெளி அறிவியலை விளையாட்டாகப் பேசும் இந்தப் புத்தகம், கண்டம் தாண்டி நம் ஊருக்கும் வந்துசேர்ந்துவிடும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x