Published : 15 May 2018 11:36 AM
Last Updated : 15 May 2018 11:36 AM

வரலாறு தந்த வார்த்தை 30: இது ‘வீக் எண்ட்’ மேட்டர்!

ன்று, உலகில் தீர்க்கப்படாத நோய்களில் மிக முக்கியமான இடத்தை வகிக்கிறது ‘எய்ட்ஸ்’. அதற்கு என்ன காரணம் தெரியுமா..? பாதுகாப்பற்ற உடலுறவுதான். அதிலிருந்து இளைஞர்களைக் காப்பாற்றவே ஆணுறை குறித்த விழிப்புணர்வு இந்தியா தவிர, இதர பல நாடுகளின் ‘பாலியல் கல்வி’யில் முக்கிய இடம்பெறுகிறது.

ஆன்மிகத் தலங்களில் சிறுமி வல்லுறவு செய்யப்படும் நாட்டில், ‘ஆணுறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தவே பலர் தயங்குகிறார்கள். தயக்கங்கள்தான் வளர்ச்சிக்கு முதல் தடை!

ஆனால், வரலாற்றைக் கொஞ்சம் திரும்பிப் பார்த்தால், மேற்கத்திய நாடுகளில்கூடச் சில பத்து ஆண்டுகளுக்கு முன்புவரை ‘ஆணுறை’ என்ற வார்த்தையைப் பயன்படுத்தத் தயங்கியிருக்கிறார்கள் என்பது தெரிகிறது.

பிரிட்டனைச் சேர்ந்த ஆண்கள் பலர், அந்நாட்களில் மருந்துக் கடைகளுக்குச் சென்று ‘திருதிரு’வென்று முழித்துக்கொண்டிருப்பார்களாம். ஆணுறையை வாங்குவதற்காகவே அவர்கள் தயங்கி நிற்கிறார்கள் என்பதைப் புரிந்துகொண்ட கடைக்காரர்கள், ‘என்ன… காண்டம் வேணுமா..?’ என்று நேரடியாகக் கேட்காமல், ‘Something for the weekend sir?’ என்று கேட்பார்களாம். அந்தக் கேள்வியே, பின்னாட்களில், ‘ஆணுறை வேண்டுமா?’ என்று கேட்பதற்கான மரபுத் தொடராக மாறியது.

ஆனால், இந்தச் சொற்றொடர் பிரிட்டனில் இருந்த முடி திருத்தும் நிலையங்களில், முடி திருத்துநர்களிடமிருந்து அறிமுகமானது என்ற குறிப்பும் இருக்கிறது. அது எப்படி என்பதற்கான ஆதாரங்கள் எதுவும் இல்லை.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x