Published : 29 May 2018 10:39 AM
Last Updated : 29 May 2018 10:39 AM
கேட்டாரே ஒரு கேள்வி
‘Hand back’ என்று ஒரு கதையில் படித்தேன். Shut up, hands up என்பதுபோல இதுவும் ஒரு கட்டளைதானே? அதாவது கைகளைப் பின்னே வைத்துக்கொள் என்பதுபோல.
--------------------------
“பிறர் விஷயத்தில் தலையிடுவது என்பதை ஆங்கிலத்தில் Nosey என்று குறிப்பிடுகிறார்கள். நாம் தலையைக் குறிக்க, அவர்கள் மூக்கைக் குறிப்பது ஏன்?”
நண்பரே, பிறர் விஷயத்தில் அளவுக்கு அதிகமான ஆர்வம் காட்டுபவர்களை (வம்புக்கு அலைபவர்களை என்றும் கூறலாம்) nosey என்பார்கள். Nosy என்றும் இதைக் கூறுவதுண்டு.
Do not be so nosy. Those are our nosy neighbours.
ஆங்கிலத்தில் மட்டுமல்ல தமிழிலும்கூட “என் விஷயத்தில் நீ ஏன் மூக்கை நுழைக்கிறாய்?” என்று கூறுவதுண்டே! நம் உடலில் மூக்குதான் பிற பாகங்களைவிட முன்னே நீட்டிக் கொண்டிருக்கிறது என்பதால் மூக்குக்கு முக்கியத்துவம் கொடுத்திருக்கலாம்.
--------------------------
‘கேட்டாரே ஒரு கேள்வி’ வாசகரே, hand back என்பது அந்த மாதிரியான உத்தரவு அல்ல. அதுவும் துப்பாக்கியோடு ஒருவர் நின்றுகொண்டு ‘கைகளைப் பின்னால் கட்டிக்கொள்’ என்பதுபோல நிச்சயமாக அல்ல. உங்களிடமிருந்து ஒரு பொருளை யாராவது கடன் வாங்கியிருந்தாலோ, எடுத்துச் சென்றிருந்தாலோ அதை நீங்கள் திருப்பிக் கேட்கும்போது பயன்படுத்தக் கூடிய வார்த்தை hand back.
Please hand back my notes which you borrowed.
--------------------------
“Eve என்கிறார்களே அது evening என்பதன் சுருக்கம் என்பது புரிகிறது. ஆனால், அது முந்தைய மாலையா, அன்றைய மாலையா?”
வாசகரே, Christmas eve என்றால் அது டிசம்பர் 24-ம் தேதி மாலையா அல்லது டிசம்பர் 25-ம் தேதி மாலையா என்று கேட்கிறீர்கள். டிசம்பர் 24 மாலைதான்.
ஒரு நிகழ்வுக்கு முன் தினத்தையோ, முன்தின மாலைப் பொழுதையோ ‘eve’ என்பார்கள். On the eve of her leaving she gave me a beautiful gift. The families celebrated new year eve, one with their entire group and the other at home.
--------------------------
“Tongue and cheek என்றால் நாக்கு மற்றும் கன்னம் என்று புரிகிறது. ஆனால், ‘Tongue-in-cheek’ என்கிறார்களே அதற்குப் பொருள் என்ன?”
Tongue-in-cheek என்றால் கொஞ்சம் கிண்டலான தொனியில் என்று பொருள். His comments were intended to be tongue-in-cheek. But his friends took it seriously and that started an argument.
“என் டீம் ஏன் தோற்றுக்கொண்டிருக்கிறது என்றா கேட்கிறீர்கள்? பிற அணியினரை வருத்தப்படவைக்கக் கூடாது என்ற உயரிய நோக்கத்தில்தான்’’ என்று ஒரு குழுவின் கேப்டன் கூறினால் அது tongue-in-cheek explanation.
குறும்பையும் கிண்டலையும் குறிக்க எதையாவது கூறும்போது நாம் கண்ணடிப்பதுண்டு. அதேபோல நாக்கை ஒரு கன்னத்துக்கு உட்புறமாகத் துருத்திக்கொள்வதும் குறும்பைக் குறிக்கும். இதிலிருந்து tongue-in-cheek என்பது உருவாகி இருக்கக் கூடும்.
--------------------------
‘This is not my forte’ என்று விவாதத்திலே ஒருவர் கூறினார். இதற்கு என்ன பொருள்?
முதலில் ஒரு சின்னத் தகவல். Forte என்ற வார்த்தையை உச்சரிக்கும்போது இறுதியில் வரும் ‘e’ என்ற எழுத்தை உச்சரிக்கக் கூடாது. Fort என்றுதான் உச்சரிக்க வேண்டும். எந்த விஷயத்தில் ஒருவருக்கு மிகுந்த திறமை இருக்கிறதோ அது அவரது forte. Cooking is not his forte என்றால் அந்த ஆணுக்குச் சமையல் கலை கைவந்ததில்லை என்று பொருள்.
--------------------------
‘To break a lance’ என்றால் என்ன என்று கேட்டிருக்கிறார் ஒரு நண்பர்.
Lance என்பது நீளமான ஈட்டி போன்ற ஆயுதம். குதிரையில் செல்லும் போர் வீரர்கள் எதிரிகளைத் தாக்க அல்லது காட்டு விலங்குகளைக் கொல்ல இதைப் பயன்படுத்துவார்கள். அதாவது ஒத்துப்போகாததால் உண்டாகும் விரும்பத்தகாத கைகலப்பு.
The newly elected MLA broke a lance with the ruling party members on the issue of hike in bus fares.
போட்டியில் கேட்டுவிட்டால்?
A great literary or artistic work is known as ____________.
a) par excellence
b) potpourri
c) magnum opus
d) bete noire
e) peccadillo
Par excellence என்றால் அதே வகையைச் சேர்ந்த பிறவற்றைவிட சிறந்தது என்று பொருள். Pot pourri என்றால் பலவற்றின் கலவை. Magnum opus என்றால் எழுத்தாளர், ஓவியர் போன்ற ஒரு கலைஞரின் தலைசிறந்த படைப்பு. Bete noire என்றால் உங்களுக்குச் சிறிதும் பிடிக்காத ஒருவர் அல்லது ஒரு பொருள். Peccadillo என்றால் ஒரு சிறு தவறு அல்லது குறைபாடு.
கொஞ்சம் தெளிவாக யோசித்துப் பார்த்தால் magnum opus என்பதுதான் இங்குப் பொருந்துகிறது என்பதை உங்களால் உணர முடியும்.
எனவே A great literary or artistic work is known as magnum opus என்பதுதான் சரியானது.
என் கேள்விக்கு என்ன பதில்?
இரு வாரங்களுக்கு முன் இப்பகுதியில் கேட்கப்பட்டிருந்த போட்டிக்கான விடைகள் வந்து குவிந்தன. நான்கு வாசகங்களில் முதல் பாதியை மட்டும் கொடுத்துவிட்டு அவற்றின் பிற்பகுதியை எழுதுமாறு கேட்டிருந்தோம். வாசக மர்ஃபிக்கள் அசத்தி விட்டார்கள்.
அவற்றில் சில இதோ:
Any tool when dropped injures your foot; I know, I am an engineer.
- எஸ்.சுப்ரமணியன், சாலிகிராமம், சென்னை
When you dial a wrong number, you have the chance of finding your true love.
If everything is coming your way, you may better wake up from your dream.
Never create a problem until you have solved the existing ones.
- அபூர்வ செல்வன், மதுரை
Any tool when dropped land head on heels.
Never create a problem when none exists.
- ஜெயஸ்ரீ பட்டாபிராமன், பொன்னியம்மன் மேடு, சென்னை
If everything is coming your way, I bet you are in the ICU.
Never create a problem, for our politicians can do it far better.
- வசந்தகுமார், நாகர்கோவில்
Never create a problem; be a problem yourself.
- என்.ராஜரீகம், தூத்துக்குடி
மனமார்ந்த பாராட்டுகள் வாசகர்களே.
சிப்ஸ்
# கண்ணில் மண்ணைத் தூவுவது என்பதை ஆங்கிலத்தில் எப்படிக் கூறலாம்?
மண்ணுக்குப் பதிலாக தூசு அவ்வளவுதான். Throw dust in the eyes.
# Half என்பதற்கும், halve என்பதற்கும் என்ன வித்தியாசம்?
Half என்றால் பாதி. Halve என்றால் பாதியாகப் பிரிப்பது.
# Priya Manian (nee Srinivasan) என்றால் என்ன?
ப்ரியாவின் கணவர் மணியன். திருமணத்துக்கு முன் ஸ்ரீனிவாசன் என்ற தன் தந்தையின் பெயரைத் தன் பெயருடன் ப்ரியா சேர்த்துக்கொண்டிருந்தார்.
தொடர்புக்கு - aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT