Published : 11 Aug 2014 09:20 AM
Last Updated : 11 Aug 2014 09:20 AM
பெயர்ச்சொல் என்றால் Noun என்பது உங்களுக்குத் தெரியும்தானே? கீழே உள்ள வார்த்தைகள் Nouns-ஆ?
1. Shyam
2. Rekha
எளிதாகக் கண்டுபிடித்திருப்பீர்கள். இப்போது மீதமுள்ள வார்த்தைகளையும் அவை Nounsஆ இல்லையா என்று இனம் பிரியுங்கள்.
3. Boy
4. Crowd
5. Ganges
6. River
எதிலாவது குழப்பம் வந்ததா? இப்போது கீழே கொடுத்துள்ள வார்த்தைகளையும் Nouns, Nouns அல்லாதவை என்று வேறுபடுத்த முடிகிறதா என்று பாருங்கள்.
7. Elephant
8. Animal
9. Affection
10. Honesty
மேலே உள்ள பத்து வார்த்தைகளில் எவற்றை Nouns என்பீர்கள்? ஒரு ஆங்கிலப் பயிற்சி வகுப்பில் இதைக் கேட்டேன். என்ன காரணத்தினாலோ பலருக்கும் Crowd, River போன்ற வார்த்தைகளில் தயக்கம் வந்தது. Affection, Honesty ஆகியவை Nouns அல்ல என்றே பெரும்பாலானவர்கள் பதில் சொன்னார்கள்.
ஆனால் மேலே குறிப்பிட்ட பத்து வார்த்தைகளும் Nounsதான்.
Shyam, Rekha போன்றவை Personal Nouns. குறிப்பிட்ட நபர்களைக் குறிக்கின்றன.
Boy, River, Elephant, Animal ஆகியவை Common Nouns. அந்த வகையிலுள்ள யாரை அல்லது எதை வேண்டுமானாலும் அந்த வார்த்தை குறிக்கும்.
Crowd, Army ஆகிய வார்த்தைகள் Collective Nouns. ஒரே பெயர்ச்சொல் போலக் காணப்பட்டாலும் அவை ஒவ்வொன்றும் பல நபர்களை உள்ளடக்கியது.
Affection, Honesty, Love ஆகியவை Abstract Nouns. அதாவது உணர்வுகள். இவற்றை உணரத்தான் முடியுமே தவிர கண்களால் காண முடியாது.
பெயர்ச்சொல்லின் விதி
ஒரு வார்த்தை Noun ஆ இல்லையா? என்பதைக் கண்டுபிடிக்க எனது தோராயமான ஆலோசனை இதுதான்.
Name என்று தொடங்கும் ஒரு கேள்வியைக் கேட்டுப் பாருங்கள்.
உதாரணமாக Name This என்று எதையோ சுட்டிக் காட்டுகிறீர்கள் என்று வைத்துக் கொள்வோம்.
Chair, Table, Pen, Book என்று எதுவாகவும் பதில் இருக்கலாம்.
அல்லது ஒரு நதியைக் காட்டி Name It என்றால் பதில் River என்பதாகவும் இருக்கலாம். Ganges என்பதாகவும் இருக்கலாம்.
இப்படி ‘Name..’ என்று தொடங்கும் எந்தக் கேள்விக்கும் அளிக்கப்படுகிற எந்த ஒற்றை வார்த்தை விடையுமே Nounதான்.
Name Him அல்லது Her என்ற கேள்விக்கு நீங்கள் அளிக்கும் விடையும் Nounதான்.
ஆல்டரேஷனும் ஆல்டர்கேஷனும்
Alteration – Altercation – Alternate - Alternative
ஒரு பொருளை மாற்றி அமைப்பதை Alter என்பார்கள். அதனால்தான் தையல்காரரிடம் கொடுக்கும்போது “பேண்ட்டைக் கொஞ்சம் Alter செய்யணும்’’ என்று தொடங்குகிறோம். Alter என்ற வார்த்தைக்குச் சமமாக Change, Amend, Redesign போன்ற வார்த்தைகளைக் குறிப்பிடலாம். Alter வினைச் சொல். அதற்கான பெயர்ச் சொல் Alteration.
ஆனால் Alteration என்பதற்கு நடுவே ‘கடல்’ புகுந்து கொண்டால்? அதாவது ‘C’ சேர்க்கப்பட்டால்?. உரத்த குரலில் சண்டை, பொது இடத்தில் கத்தி விவாதித்தல் போன்றவற்றைக் குறிப்பிடவே Altercation என்ற வார்த்தை பயன்படுகிறது.
எனக்குத் தெரிந்த பலரும் Alternate மற்றும் Alternative ஆகிய வார்த்தைகளை மாற்றிப் பயன்படுத்துகிறார்கள். ஒருவர் கூறும் தீர்வு உங்களுக்குப் பிடிக்கவில்லையென்று வைத்துக் கொள்வோம். இதற்கு Alternate என்ன என்று கேட்கக் கூடாது.
Alternate என்றால் குறிப்பிட்ட இடைவெளியில் மீண்டும் மீண்டும் நடைபெறுகிற என்று பொருள். 1,3,5,7,9 ஆகியவை Alternate Numbers. Periods Of Depression Alternate With Periods Of Elation.
Alternative என்பது மாற்று, அதாவது Substitute அல்லது Replacement. These Are The Alternative Methods For Resolving The Issues என்பதுபோல. While Raining, Playing An Indoor Game Is An Alternative To Reading என்பதைப் போல.
தவிர வேறொரு அர்த்தத்திலும் Alternative என்ற வார்த்தை பயன்படுத்தப்படுகிறது. மரபுகளிலிருந்து விலகிய பொருட்கள் மற்றும் செயல்பாடுகளைக் குறிக்க இந்த வார்த்தையைப் பயன்படுத்துவதுண்டு. An Alternative Life Style, An Alternative World என்பதைப் போல. அதாவது Unusual, Radical, Unorthodox போன்ற வார்த்தைகளை Alternative என்ற வார்த்தைக்குச் சமமான வார்த்தைகளாகக் குறிப்பிடலாம்.
பாடல் வரிகளின் ஆங்கிலம்
சென்ற பகுதியில் இரண்டு தமிழ் திரைப்படப் பாடல்களின் முதல் வரிகளை ஆங்கிலத்தில் கொடுத்து அவை என்ன பாடல்கள் என்பதைக் கண்டுபிடிக்கச் சொல்லியிருந்தேன். விடைகள் இதோ.
1) We Should Live Like That Bird. We Should Dance Like Those Waves. – அதோ அந்தப் பறவை போல வாழவேண்டும். இதோ இந்த அலைகள் போல ஆட வேண்டும்.
2) Is This Life A Riddle? Who Shall Provide The Solution? – விடுகதையா இந்த வாழ்க்கை? விடை தருவார் யாரோ?
தொடர்புக்கு:
aruncharanya@gmail.com
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT