Published : 30 May 2023 06:12 PM
Last Updated : 30 May 2023 06:12 PM

‘எங்களுக்காகவும் தோனிக்காவும் ஆடினார்... தேங்க் யூ ஜடேஜா!’ - சிலாகிக்கும் சிஎஸ்கே ரசிகர்கள்

கடைசிக்கட்ட போராட்டத்தில் சிஎஸ்கே ஐபிஎல் கோப்பையை வெல்ல உறுதுணையாக இருந்த ரவீந்திர ஜடேஜாவை ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். “அவர் எங்களுக்காகவும், தோனிக்காவும் ஆடினார்; தேங்க் யூ ஜடேஜா” என உளபூர்வமாக தங்களது உணர்வுகளை வெளிப்படுத்தியுள்ளனர்.

16-வது ஐபிஎல் போட்டி ஏன் ஸ்பெஷல்? தோனியின் கடைசிப் போட்டி என்பதும் இந்த சீசனுக்குப் பிறகு அவர் ஓய்வை அறிவிப்பார் என்ற உறுதிப்படுத்தப்படாத தகவல்களும் தான் நடந்து முடிந்த ஐபிஎல் சீசனை அழகாக்கியது. மேலும், சிஎஸ்கே கோப்பையை வென்றாக வேண்டும் என்ற முனைப்பை ரசிகர்களிடம் ஏற்படுத்தியது. அப்படியான எதிர்பார்ப்பு கொண்ட ரசிகர்களின் கனவுக் கயிறு இறுதிக்கட்டத்தில் கை நழுவும்போது அதனை இறுக்கிப் பிடிக்கும் ஒருவரை ரசிகர்கள் ஒருபோதும் மறக்க மாட்டார்கள்.

இன்று ஜடேஜாவை ரசிகர்கள் கொண்டாட இது முக்கியமான காரணம். கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற இக்கட்டான சூழலில் ஒரு பந்தில் சிக்ஸ் மற்றொரு பந்தில் 4 என்ற விளாசி வெற்றிக்கு வித்திட்ட ஜடேஜாவை நெட்டிசன்கள் எப்படியெல்லாம் கொண்டாடுகின்றனர் என்பதைப் பார்ப்போம்.

நெட்டிசன் ஒருவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர் தோனிக்காகவும், எங்களுக்காகவும் விளையாடினார். தேங்க் யூ ஜடேஜா” என பதிவிட்டுள்ளார்.

மற்றொருவர், “இது ஜடேஜாவுக்கான சிறப்புக் காணொலி” என கூறி வீடியோ ஒன்றை பதிவிட்டுள்ளார். வீடியோவைக் காண: https://twitter.com/superking1816/status/1663450833772761088?s=20

விபின் திவாரி என்பவர் தனது ட்விட்டர் பக்கத்தில், “ஜடேஜா தி ஃபினிஷர்” என பதிவிட்டுள்ளார்.

— Vipin Tiwari (@vipintiwari952) May 30, 2023

மற்றொரு நெட்டிசன், “என்ன மாதிரியான ஒரு விளையாட்டு, ஜடேஜாவின் மனைவி கண்களில் கண்ணீர். நன்றி ஜடேஜா” என பதிவிட்டுள்ளார்.

சர்ஜியோ என்பவர் ட்விட்டர் பக்கத்தில், “தோனி இப்படி அழுது இதுவரை பார்த்ததில்லை. ஜடேஜா நீங்கள் என்னுடைய உலகத்தை மட்டும் உலுக்கவில்லை. தோனியும் உலகத்தையும் சேர்த்து உலுக்கிவிட்டீர்கள்” என பதிவிட்டுள்ளார்.

வெற்றிக்கு பிறகு தொலைக்காட்சி வர்ணனையில் பேசிய ஜடேஜா, ‘இந்த வெற்றி தோனிக்கு சமர்ப்பணம்’ என சொன்ன அந்தத் தருணம் மாஸ். இந்தப் போட்டிக்கு முன்னர் வரை தோனி - ஜடேஜா இடையே முரண்பாடு இருப்பதாக சொல்லப்பட்டது. ஜடேஜாவும் தனது சமூக வலைதளப் பதிவுகள் மூலம் இதை மறைமுகமாக தெரிவித்தது போல இருந்தது. ஆனால், அது அனைத்தும் தாமரை இலை மேல் பட்ட நீர் துளி போல ஆனது.

அதேபோல, சென்னையில் நடந்த ஐபிஎல் போட்டிகளில் தோனியின் பேட்டிங்கை காண வேண்டும் என்ற ஆர்வத்தில் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் ஜடேஜாவின் விக்கெட்டுக்காக காத்திருந்த துரதிஷ்டமும் நிகழ்ந்தது. ஆனால், ஜடேஜாவின் நேற்றைய ஆட்டத்திற்கு பின் காட்சிகள் மாறியுள்ளன. தங்கள் தவறை உணர்ந்துவிட்டதாக சிஎஸ்கே ரசிகர்கள் சமூக வலைதளங்களில் பதிவிட்டிருப்பது ஆரோக்கியமான போக்காக பார்க்கப்படுகிறது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x