Published : 29 May 2023 09:28 PM
Last Updated : 29 May 2023 09:28 PM
மதுரை: சென்னையில் நடந்த மாநில அளவிலான கிக் பாக்ஸிங் போட்டியில் மதுரையைச் சேர்ந்த மாணவர்கள் 9 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளனர்.
சென்னையில் தமிழ்நாடு உடற்கல்வி மற்றும் விளையாட்டு பல்கலைக்கழகத்தில் மாநில அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டி மே 26 முதல் 28ம் தேதி வரை நடந்தது. இதில் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 800க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.
இதில் பாய்ண்ட் ஃபைட்டிங், லைட் காண்டாக்ட், கிக் லைட், புல் கான்டாக்ட் மற்றும் மியூசிக்கல் பாஃர்ம் ஆகிய பிரிவுகளில் போட்டிகள் நடந்தது. இப்போட்டியில் மதுரையை சேர்ந்த மாணவ மாணவிகள் பங்கேற்று 9 தங்கப்பதக்கம், 10 வெள்ளி, 11 வெண்கலம் வென்றனர். பாயிண்ட் ஃபைட்டிங் பிரிவில் சம்யுக்தா, சாரா, பாலமுருகன் தங்கப்பதக்கமும், சித்தார்த், ஷாலினி வெள்ளியும், ஹரிஷ்ராஜ், ராஜவெற்றிவேல், நிகில், ரக்சன், ஸ்ரீவதனா வெண்கலம் வென்றனர்.லைட் காண்டாக்ட் பிரிவில் ஷாலினி தங்கப்பதக்கமும், அகில் குமார், ரக் ஷாம்பிகா, நவீன் குமார், பாலமுருகன் வெள்ளியும், ஹரிஷ்ராஜ், ராகராஜேஷ் வெண்கலமும் வென்றனர்.
கிக் லைட் பிரிவில் ஜெயசிம்ம விருமன் தங்கப்பதக்கம் , க்ரிஷ் கார்த்திக் வெண்கலம் வென்றனர். புல் காண்டாக்ட் பிரிவில் விஷ்ணு பிரசாந்த் தங்கப்பதக்கம் வென்றார்,மியூசிக்கல் பார்ம் ஹார்ட் ஸ்டைல் பிரிவில் ஸ்ரீவதனா தங்கப்பதக்கம், சித்தார்த், ஜாய் பிரசன்னா, மருதீஸ்வரன் வெண்கலம் வென்றனர்,
மியூசிக்கல் ஃபார்ம் ஹார்ட் ஸ்டைல் வெப்பன் பிரிவில் ஸ்ரீவதனா, ராஜவெற்றிவேல் தங்கப்பதக்கமும், தரணிதரன் வெள்ளி பதக்கமும் வென்றனர்.மியூசிக்கல் ஃபார்ம் கூட்டு பிரிவில் ராஜசிங்கவேல் ஆதித்யா, ராஜ வெற்றிவேல் வெள்ளிப்பதக்கம் வென்றனர்.
இதில், மாநில அளவில் தங்கப்பதக்கம் வென்ற மாணவர்கள் ஆகஸ்ட் மாதம் நடக்கும் தேசிய அளவிலான கிக் பாக்ஸிங் சாம்பியன்ஷிப் போட்டிக்குச் செல்ல தகுதி பெற்றுள்ளனர்.
இப்போட்டியில் வென்ற மாணவ மாணவிகளை மதுரை மாவட்ட அமெச்சூர் கிக் பாக்ஸிங் சங்க தலைவர் நாராயணன், செயலாளர் பிரகாஷ் குமார், பயிற்சியாளர்கள் கார்த்திக், முத்துக்குமார் பாராட்டினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT