Published : 29 May 2023 07:21 PM
Last Updated : 29 May 2023 07:21 PM
அகமதாபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் இறுதிப் போட்டி முடிந்த பிறகு மீண்டும் ஒருமுறை தான் தோனி வசம் ஆட்டோகிராப் பெறுவேன் என நம்புவதாக தெரிவித்துள்ளார் சுனில் கவாஸ்கர். முன்னதாக, லீக் போட்டியின் போது தோனியின் ஆட்டோகிராப்பை தனது சட்டையில் பெற்றார் கவாஸ்கர்.
சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் குஜராத் டைட்டன்ஸ் அணிகள் அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் இந்தப் போட்டி நடைபெறுகிறது. மழை காரணமாக நேற்று நடைபெற இருந்த இந்தப் போட்டி இன்று நடைபெறுவது குறிப்பிடத்தக்கது. இதில் டாஸ் வென்றுள்ள சிஎஸ்கே அணி பவுலிங் தேர்வு செய்துள்ளது.
“இந்திய கிரிக்கெட்டுக்காக தோனி வழங்கியுள்ள பங்களிப்புக்காக நான் அவரது ரசிகனாக உள்ளேன். அவரது மகத்துவம் ஆண்டுக்கு ஆண்டு கூடிக் கொண்டே உள்ளது. அதனால் நான் அவரது ரசிகராக என்றென்றும் இருப்பேன். இறுதிப் போட்டிக்கு பிறகு அவரிடம் ஆட்டோகிராப் பெறுவேன் என நம்புகிறேன்” என சுனில் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். இறுதிப் போட்டிக்கு முன்னர் நேரலையில் அவர் இதனை தெரிவித்திருந்தார்.
Sunil Gavaskar : "you can't really get anyone bigger than MS Dhoni in Indian cricket. There's Virat Kohli and Sachin Tendulkar, but I've seen how MS overtaken them. The electricity he generates is different among crowd when he steps on the field". pic.twitter.com/UkyW60lZ2y
— ` (@rahulmsd_91) May 29, 2023
அதோடு இந்திய கிரிக்கெட்டில் தோனி ஆகச் சிறந்தவர். அவரை காட்டிலும் சிறந்த வீரரை பெற முடியாது. கோலி, சச்சின் போன்றவர்கள் உள்ளனர். ஆனால், அவர்களை தோனி எப்படி முந்தினார் என்பதை நான் பார்த்துள்ளேன். ரசிகர்கள் மத்தியில் களத்தில் அவர் பரப்பும் மின் சக்தி முற்றிலும் வித்தியாசமானது எனவும் கவாஸ்கர் தெரிவித்துள்ளார். அது நெட்டிசன்கள் மத்தியில் விவாத பொருளாகி உள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT