Published : 24 May 2023 12:50 PM
Last Updated : 24 May 2023 12:50 PM
சென்னை: சிஎஸ்கே ஆல்ரவுண்டர் ரவீந்திர ஜடேஜாவின் ட்வீட் ஒன்று தற்போது சமூக வலைதளங்களில் பேசும்பொருளாகி இருக்கிறது.
குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் பிளே ஆஃப் போட்டியில் 15 ரன்கள் வித்தியாசத்தில் வென்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 10-வது முறையாக ஐபிஎல் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. இப்போட்டியில் சிறப்பாக விளையாடி வெற்றிக்கு உறுதுணைபுரிந்தார் ஜடேஜா.
இப்போட்டியில் அப்ஸ்டாக்ஸ் நிறுவனத்தின் ’போட்டியின் சிறந்த மதிப்புமிக்க வீரர்’ விருது ஜடேஜாவுக்கு வழக்கப்பட்டது. இந்த நிலையில், ஜடேஜா பதிவிட்ட ட்வீட் ஒன்று பேசுபொருளாகியுள்ளது.
2023-ஆம் ஆண்டு ஐபிஎல் லீக் போட்டிகளில் ஜடேஜா சிறப்பாக விளையாடாததால் சிஎஸ்கே ரசிகர்கள் சிலர் ஜடேஜாவை சமூக வலைதளங்களில் விமர்சித்தனர். மேலும், சிஎஸ்கே அணியின் துபே, பத்ரினாவுக்கு ரசிகர்களிடம் வரவேற்பு அதிகமாக இருந்தது.
இந்த நிலையில், இந்த விருதைக் குறிப்பிட்டு ஜடேஜா தனது ட்விட்டர் பக்கத்தில், “அவர்களுக்குத் தெரிகிறது... ஆனால், சில ரசிகர்களுக்கு அது தெரியவில்லை” என்று பதிவிட்டிருந்தார். இதனைத் தொடர்ந்து அவரது ட்வீட் வைரலானது. மேலும், ஜடேஜாவின் மனைவி ரிவாமா அவரது ட்விட்டை குறிப்பிட்டு, “அமைதியாக... கடினமாக உழையுங்கள், உங்கள் வெற்றியே உங்கள் குரலாக இருக்கட்டும்... என் அன்பே” என்று பதிவிட்டுள்ளார்.
ஜடேஜா 150 - நேற்றைய ஆட்டத்தில் தசன் ஷனகாவின் விக்கெட்டை சிஎஸ்கேவின் ஜடேஜா கைப்பற்றினார். ஐபிஎல் தொடரில் ஜடேஜாவுக்கு இது 150-வது விக்கெட்டாக அமைந்தது. மேலும் பேட்டிங்கில் ஆயிரம் ரன்களுக்கு மேலும், பந்து வீச்சில் 150 விக்கெட்களையும் கைப்பற்றிய 3-வது வீரர் என்ற பெருமையையும் பெற்றார் ஜடேஜா. பேட்டிங்கில் ஜடேஜா 2,677 ரன்கள் சேர்த்துள்ளார். இந்த வகை சாதனையில் டுவைன் பிராவோ 1,560 ரன்களையும் 183 விக்கெட்களையும் கைப்பற்றி முதலிடத்தில் உள்ளார். சுனில் நரேன் 1,046 ரன்கள், 163 விக்கெட்களை எடுத்துள்ளார்.
Upstox knows but..some fans don’t pic.twitter.com/6vKVBri8IH
— Ravindrasinh jadeja (@imjadeja) May 23, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT