Published : 21 May 2023 09:11 PM
Last Updated : 21 May 2023 09:11 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் 69-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை 8 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி உள்ளது மும்பை இந்தியன்ஸ் அணி. இந்தப் போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது மும்பை. கேமரூன் கிரீன், 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து அசத்தினார்.
மும்பை வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற மும்பை அணி பவுலிங் தேர்வு செய்தது. 20 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 200 ரன்கள் எடுத்தது ஹைதராபாத். முதல் விக்கெட்டிற்கு 140 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர் விவ்ராந்த் சர்மா மற்றும் மயங்க் அகர்வால். அந்த அணிக்காக அதிகபட்சமாக விவ்ராந்த் 69 ரன்களும், மயங்க் 83 ரன்களும் எடுத்தனர்.
20 ஓவர்களில் 201 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்கை மும்பை விரட்டியது. இஷான் கிஷன் 14 ரன்களில் விக்கெட்டை இழந்தார். தொடர்ந்து வந்த கிரீன் உடன் 128 ரன்களுக்கு பார்ட்னர்ஷிப் அமைத்தார் ரோகித் சர்மா. 37 பந்துகளில் 56 ரன்கள் எடுத்து ரோகித் வெளியேறினார். இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்த கேமரூன் கிரீன், 47 பந்துகளில் 100 ரன்கள் எடுத்தார். சூர்யகுமார் யாதவ், 16 பந்துகளில் 25 ரன்கள் எடுத்தார்.
இந்த வெற்றியின் மூலம் மும்பை அணி பிளே-ஆஃப் சுற்றில் நான்காவது அணியாக நுழையும் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது. அந்த அணியின் வாய்ப்பு பெங்களூரு மற்றும் குஜராத் அணிகளுக்கு இடையிலான போட்டியின் முடிவை பொறுத்தே அமையும். அதில் பெங்களூரு வெற்றி பெற்றால் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும். குஜராத், சென்னை மற்றும் லக்னோ அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு ஏற்கனவே தகுதி பெற்றுள்ளன.
@mipaltan stay alive in #TATAIPL 2023 courtesy of an exceptional batting display and an 8-wicket win over #SRH #MIvSRH pic.twitter.com/t1qXyVbkqG
— IndianPremierLeague (@IPL) May 21, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT