Published : 19 May 2023 08:56 AM
Last Updated : 19 May 2023 08:56 AM
ஹைதராபாத்: நடப்பு ஐபிஎல் சீசனின் 65-வது லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக அபார வெற்றி பெற்றது ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி. இதில் அந்த அணியின் கேப்டன் டூப்ளசி மற்றும் கோலியின் பங்கு அதிகம். 63 பந்துகளில் 100 ரன்கள் எடுத்து கோலி மிரட்டினார்.
இந்தச் சூழலில் போட்டி முடிந்த பிறகு அவர் தெரிவித்தது. இந்தப் போட்டியில் அவர் தான் ஆட்ட நாயகன் விருதை வென்றிருந்தார். ஐபிஎல் அரங்கில் அவர் பதிவு செய்துள்ள ஆறாவது சதம் இது. இந்த வெற்றியின் மூலம் பிளே-ஆஃப் வாய்ப்பை உயிர்ப்புடன் வைத்துள்ளது ஆர்சிபி.
“இது அபாரமான போட்டி. ஹைதராபாத் அணி நல்ல ஸ்கோர் தான் எடுத்திருந்தார்கள். இந்த இலக்கை விரட்டும் போது சிறப்பான தொடக்கம் கொடுக்க வேண்டும் என விரும்பினோம். ஆனால், விக்கெட் இழப்பின்றி 172 ரன்கள் எடுப்போம் என எதிர்பார்க்கவில்லை. அணிக்கு தேவைப்படும் சரியான நேரத்தில் எனது ஆட்டத்தை மீட்டெடுத்து வர வேண்டும் என நினைத்தேன். அது நடந்துள்ளது. முதல் பந்து முதலே ஆட்டத்தில் என்னால் தாக்கம் ஏற்படுத்த முடிந்தது. நான் கடந்த கால சாதனைகளை எப்போதும் பார்ப்பது இல்லை. நானே என்னை அழுத்ததில் தள்ளிக் கொள்வேன். போட்டியில் தாக்கம் கொடுக்கும் வகையிலான எனது சில ஆட்டத்திற்கு நான் தனிப்பட்ட கிரெடிட் கொடுப்பதில்லை. அதனால் வெளியிலிருந்து யார் என்ன சொன்னாலும் நான் அதை பொருட்படுத்த மாட்டேன். அது அவர்கள் கருத்து. ஆட்டத்தின் அந்த சூழலில் நீங்கள் இருந்தால் மட்டுமே ஆட்டத்தை எப்படி எடுத்து செல்ல வேண்டும் என்பது தெரியும். அதை நான் நீண்ட காலமாக செய்து வருகிறேன்.
நான் அதிகம் பேன்சி ஷாட் ஆடுவதில்லை. ஆண்டில் 12 மாதங்களும் கிரிக்கெட் விளையாடுகிறோம். ஐபிஎல் முடிந்ததும் டெஸ்ட் கிரிக்கெட்டில் நாங்கள் விளையாட வேண்டி உள்ளது. அதனால் நான் எனது டெக்னிக்கில் நிலையாக இருக்க விரும்புகிறன்.
டூப்ளசி உடன் இணைந்து விளையாடும்போது டிவில்லியர்ஸ் உடன் விளையாடும் உணர்வை என்னால் பெற முடிகிறது. சர்வதேச கிரிக்கெட்டில் நீண்ட அனுபவம் கொண்ட டூப்ளசி, அணியை வழிநடத்துவதும், டாப் ஆர்டரில் பேட்டிங்கில் அசத்துவதும் எங்களுக்கு சாதகம். இங்கு விளையாடுவது எங்கள் சொந்த மைதானத்தில் (பெங்களூரு) விளையாடுவது போல இருந்தது. ரசிகர்களின் ஆதரவு எங்களுக்கு அமோகமாக இருந்தது. நான் விளையாடும் போது ரசிகர்கள் முகத்தில் தென்படும் புன்னகையை பார்க்கவே அதிகம் விரும்புகிறேன்” என கோலி தெரிவித்தார். டி20 கிரிக்கெட்டில் கோலியின் அணுகுமுறை குறித்து விமர்சனம் முன்வைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
What is the secret of the highly successful Virat-Faf pair?
We will let King Kohli spill the beans #TATAIPL | #SRHvRCB | @RCBTweets | @imVkohli | @faf1307 pic.twitter.com/BEKGcALbZK
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT