Published : 18 May 2023 09:36 AM
Last Updated : 18 May 2023 09:36 AM
துபாய்: 23 வயதான அயர்லாந்து பேட்ஸ்மேன் ஹாரி டெக்டர், ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் டாப் 10 பேட்ஸ்மேன்களில் ஒருவராக இணைந்துள்ளார். அதோடு இந்தியாவின் விராட் கோலி மற்றும் தென் ஆப்பிரிக்காவின் டிகாக்கை அவர் முந்தியுள்ளார். தற்போது 722 ரேட்டிங் உடன் 7-வது இடத்தில் அவர் உள்ளார்.
இந்த தரவரிசையில் பாபர் அசாம் (பாகிஸ்தான்), ராசி வான் டெர் டுசென் (தென் ஆப்பிரிக்கா), ஃபகார் ஜமான் (பாக்.), இமாம்-உல்-ஹக் (பாக்.), சுப்மன் கில் (இந்தியா), டேவிட் வார்னர் (ஆஸி.) ஆகியோர் முதல் 6 இடங்களில் உள்ளனர். கோலி 8-வது இடத்தில் உள்ளார். டிகாக் மற்றும் ரோகித் சர்மா அடுத்தடுத்த இடங்களில் உள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற வங்கதேச அணிக்கு எதிரான ஒருநாள் தொடரில் டெக்டர் அபாரமாக விளையாடி இருந்தார். இந்த தொடரின் இரண்டாவது போட்டியில் 140 ரன்களை சேர்த்து அசத்தினார். அதோடு 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரை அதிக ரன் எடுத்த பேட்ஸ்மேனாக நிறைவு செய்தார். இதன் மூலம் ஐசிசி ஒருநாள் பேட்டிங் தரவரிசையில் அவர் முன்னேற்றம் கண்டார். முக்கியமாக அயர்லாந்து ஆடவர் கிரிக்கெட்டில் எந்தவொரு பேட்ஸ்மேனும் எட்டிடாத ஐசிசி தரவரிசையை அவர் எட்டி சாதனை படைத்துள்ளார். அதோடு மாடர்ன் டே கிரிக்கெட்டின் மகத்தான வீரர்களான ரோகித், ஸ்மித், டிகாக், பட்லர், கோலி ஆகியோரை அவர் முந்தியுள்ளார்.
இதற்கு முன்னர் கடந்த 2021 ஜூனில் ஐசிசி தரவரிசையில் அயர்லாந்து அணி வீரர் பால் ஸ்டெர்லிங் 697 புள்ளிகளை பெற்றுள்ளார். அயர்லாந்தை சேர்ந்த மோர்கன், ஐசிசி தரவரிசையில் கடந்த 2019-ல் 712 புள்ளிகளை பெற்றுள்ளார். இருந்தாலும் அவர் இங்கிலாந்து அணிக்காக விளையாடி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Harry Tector has achieved the highest rating by an Ireland batter in the latest @MRFWorldwide ICC Men’s ODI Player Rankings for Batting
Details https://t.co/9xdbhCIxdK pic.twitter.com/uifF9a0aau— ICC (@ICC) May 17, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT