Published : 17 May 2023 12:54 PM
Last Updated : 17 May 2023 12:54 PM
மும்பை: நடப்பு ஐபிஎல் சீசனின் வர்ணனை பணியை கவனித்து வருகிறார் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன். ‘நீங்கள் தானே தோனி கைப்பற்றிய முதல் மற்றும் ஒரே டெஸ்ட் விக்கெட்’ என அவரிடம் பலரும் கேட்டு வருகின்றனர். அது தொடர்பாக அவரும் விளக்கம் கொடுத்து அலுத்துவிட்டார். இந்த சூழலில் அது தொடர்பாக வீடியோ ஆதாரத்தை அவர் வெளியிட்டுள்ளார். அதன் மூலம் ‘நான் அவனில்லை’ என அடித்து சொல்லியுள்ளார்.
இந்த கேள்விக்கு வித்திட்டவர் மகேந்திர சிங் தோனி தான். 2017 ஐபிஎல் சீசனின் போது வர்ணனை பணியை கவனித்துக் கொண்டிருந்த தோனி ‘அவர்தான் என்னுடைய முதல் டெஸ்ட் விக்கெட்’ என வேடிக்கையாக சொல்லி இருந்தார். அப்போது வர்ணனை பணியை கவனித்த பீட்டர்சன், மைக்ரோ போன் மூலம் புனே வீரர் மனோஜ் திவாரியுடன் பேசி இருந்தார். அப்போதுதான் இது நடந்தது.
இது நடந்து ஆறு ஆண்டுகள் கடந்த நிலையில் ‘நீங்கள் தானே தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட்’ என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இந்த நிலையில் கடந்த 2011-ல் இங்கிலாந்து மற்றும் இந்திய அணிகளுக்கு இடையிலான லார்ட்ஸ் போட்டியின் வீடியோ கிளிப் ஒன்றை சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார் பீட்டர்சன். அந்த போட்டியின் முதல் நாள் அன்று தோனி பந்து வீசினார். அப்போது பீட்டர்சன் ஸ்ட்ரைக்கில் இருந்தார். அதில் ஒரு பந்து பீட்டர்சனின் பேட்டை உரசி சென்றது போல இருந்தது. ‘அவுட்’ என தோனி முறையிட்டார். நடுவரும் அவுட் கொடுத்தார். டிஆர்எஸ் பரிசீலனையில் பீட்டர்சன் அவுட் இல்லை என உறுதியானது.
“ஆதாரம் மிகத் தெளிவாக உள்ளது. நான் தோனியின் முதல் டெஸ்ட் விக்கெட் அல்ல. சிறப்பாக பந்து வீசி உள்ளீர்கள் எம்.எஸ்” என அந்த வீடியோவுக்கு கேப்ஷன் கொடுத்துள்ளார் பீட்டர்சன். “தோனியின் முதல் விக்கெட் நான் தான் என சொல்லப்படும் அனைத்திற்கும் விளக்கம் கொடுக்கும் வகையில் லார்ட்ஸ் போட்டியின் வீடியோ ஆதாரத்தை தீவிரமாக தேடி வருகிறேன். நிச்சயமாக அவரது முதல் டெஸ்ட் விக்கெட் நான் இல்லை” என அவர் முந்தைய ட்வீட் ஒன்றில் தெரிவித்துள்ளார்.
பவுலர் தோனி: விக்கெட் கீப்பரான தோனி சர்வதேச கிரிக்கெட்டில் 22 ஓவர்கள் வீசி உள்ளார். 6 ஓவர்கள் ஒருநாள் கிரிக்கெட்டிலும், 16 ஓவர்கள் டெஸ்ட் கிரிக்கெட்டிலும் அடங்கும். இதில் ஒரே ஒரு விக்கெட்டை மட்டுமே கைப்பற்றியுள்ளார். அது ஒருநாள் கிரிக்கெட்டில் கைப்பற்றியதாகும். மேற்கிந்திய தீவுகள் வீரர் டி.எம். டவுலின் மட்டுமே.
The evidence is CLEAR! I was NOT Dhoni’s first Test wicket.
Nice ball though, MS!
Thanks for sending this through, @SkyCricket pic.twitter.com/XFxJOZG4me— Kevin Pietersen(@KP24) May 16, 2023
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT